Diabetes: நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாகும் வெங்காயம்

Fri, 21 May 2021-6:29 pm,

வெங்காயத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த இரண்டு கூறுகளும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கின்றன. சில நேரங்களில் நீரிழிவு நோயின் அறிகுறிகள் உடனே தென்படுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு நபரும் 30 வயதை எட்டியவுடன் அவரது உடல்நிலையை தொடர்ந்து பரிசோதித்து கொள்ள வேண்டும். 

வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கிறது.

 

நீரிழிவு நோயாளிகளுக்கு செரிமான திறன் குறைவாக உள்ளது. இந்த வகையில், பச்சை வெங்காயத்தை உட்கொள்வது செரிமானத்தை அதிகரித்து, அதன் மூலம் உடலின் வளர்சிதை மாற்றத்தை (metabolism) மேம்படுத்துகிறது. மெடபாலிஸம் உடலில் நல்ல நிலையில் இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

நீரிழிவு நோயாளிகள் குறைந்த கார்போஹைட்ரேட் அதாவது மாவு சத்து உள்ள உணவை உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வெங்காயத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மிகக் குறைவு. 

குறைவான கிளைசெமிக் குறியீட்டைக் (Glycemic Index) கொண்ட எந்த உணவும் நீரிழிவு நோயாளிக்கு நன்மை பயக்கும். கிளைசெமிக் குறியீடு, குறிப்பிட்ட உணவு, இரத்தத்தில் சர்க்கரை அளவை எந்த அளவிற்கு கட்டுபடுத்தும் என்பதை அதில் உள்ள காபோஹைட்ரே அளவை வைத்து நிர்ணயிக்கப்படும் குறியீடாகும். வெங்காயத்தின் Glycemic Index  10 ஆக உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் மிகவும் சிறந்தது மருத்துவர்கள் கருதுகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link