’ரோஜாவில் பிறந்த குழந்தை’ இசைப்புயலின் கேலரி
1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் பிறந்தார். இவருடைய இயற்பெயர் அருணாச்சலம் சேகர் திலீப் குமார்.
அம்மா பெயர் கஸ்தூரி. மனைவி பெயர் சாய்ரா பானு. மகன் ஏ.ஆ,ர். அமீன். மகள்கள் ரஹிமா, கதிஜா.
11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார்.
டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
தன்னுடைய இசையுலகப் பயணத்தை 1985 -ல் ஆரம்பித்தார் ஏ.ஆர்.ரகுமான். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்துக்கே தேசிய விருது கிடைத்தது.
இதன் பின்னர், இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார் ஏ.ஆர்.ரகுமான். அடுத்தடுத்து ஹிட் பாடல்களை கொடுத்ததால் பட வாய்ப்புகளும் விருதுகளும் இவரைத் தேடி வந்தன.
’ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற ஆங்கில திரைப்படத்துக்காக இவருக்கு இரண்டு ஆஸ்கர் விருது கிடைத்தது. அன்று முதல் இந்தியாவின் ‘ஆஸ்கர் நாயகன்’ என அழைக்கப்படுகிறார்.
இந்த விருதுக்குப் பிறகு கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது மற்றும் ஃபிலிம்பேர் விருது என ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஆஸ்கார் விருது மேடையில் தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் உச்சரித்தது, தமிழ் மொழி மீது இவர் வைத்திருக்கும் பேரன்பை வெளிப்படுத்தியது.
ஆஸ்கார் விருது மேடையில் தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் உச்சரித்தது, தமிழ் மொழி மீது இவர் வைத்திருக்கும் பேரன்பை வெளிப்படுத்தியது.
2017 ஆம் ஆண்டு இவருக்கு தமிழ் ரத்னா விருது வழங்கி அமெரிக்கா தமிழ் சங்கம் கவுரவித்துள்ளது