Padma Awards 2022: பத்ம விருது பெற்றவர்களில் முக்கியமான சிலர்

Tue, 22 Mar 2022-11:30 pm,

ஜெனரல் பிபின் ராவத் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்

 

டாக்டர் ஷியாமமணி தேவியின் கலை சாதனைகளுக்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

ஒடிஷி இசையின் இலக்கணத்தின் குறியீடாக்கத்திற்கும் அதன் முறையான வளர்ச்சிக்கும் அவரது பங்களிப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. 4,000 க்கும் மேற்பட்ட பாடல்களுடன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். (Photograph:Twitter)

சிவில் சேவைகாக  ஸ்ரீ ராஜீவ் மெஹ்ரிஷிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

அரசு ஊழியரான மெஹ்ரிஷி, தனது வாழ்க்கை முழுவதும் நிர்வாக அமைப்புகளில் அடிப்படை மாற்றங்களை முயற்சி செய்வதில் செலவிட்டவர். அவர் இந்தியாவின் 13வது கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் பதவியையும் வகித்தார். (Photograph:Twitter)

சுவாமி சிவானந்தா யோகாவிற்காக பத்மஸ்ரீ விருது பெற்றார். கடந்த 50 ஆண்டுகளில், பூரியில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து, மனித நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். அவர் 1896 இல் பிறந்தார், மற்றும் அவரது ஆரோக்கியமான, நீண்ட வாழ்க்கை தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளின் கவனத்தை ஈர்த்தது.

பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் வணங்கம் செலுத்தியது இணையத்தில் வைரலாகி வருகிறது. (Photograph:Twitter)

ஸ்ரீ ராதே ஷியாம் கெம்கா (மரணத்திற்குப் பின்) இலக்கியம் மற்றும் கல்விக்கான அவரது பங்களிப்புகளுக்காக பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார். பழங்கால சனாதன இலக்கியங்களை பிராந்திய மொழிகளில் எழுதியவர், ஆசிரியர் மற்றும் பதிப்பாளர், அவர் சனாதன இலக்கியத்தை வெகுஜனங்களுக்குச் சென்றடையச் செய்வதில் கணிசமானபங்களிப்பைச் செய்தவர்.

பேராசிரியை நஜ்மா அக்தருக்கு இலக்கியம் மற்றும் கல்விக்கான பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

முன்னணி கல்வி நிர்வாகி மற்றும் நிறுவனத்தை உருவாக்கிய நஜ்மா அக்தர், ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் முதல் பெண் துணைவேந்தர் ஆவார். (Photograph:Twitter)

ஸ்ரீ குலாம் நபி ஆசாத் பொது விவகாரங்களில் ஆற்றிய பணிக்காக பத்ம பூஷன் விருது பெற்றுள்ளார். ஸ்ரீ ஆசாத் ஒரு அரசியல் தலைவர் மற்றும் சமூக சேவகர் என புகழ் பெற்றவர். (Photograph:Twitter)

டாக்டர் சைரஸ் சோலி பூனவல்லா வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான பத்ம பூஷன் விருதைப் பெற்றுள்ளார்.

பூனாவல்லா குழுவில் இந்தியாவின் சிறந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனமான செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர்.  உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரும், கோவிட்-19 தடுப்பூசி கோவிஷீல்ட் தயாரிக்கும் நிறுவனம் செரம் இன்ஸ்டிடியூட் ஆகும்.    (Photograph:Twitter)

ஸ்ரீ என் சந்திரசேகரன் வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் செய்த பணிக்காக பத்ம பூஷன் விருது பெற்றுள்ளார். நாட்டின் முன்னணி தொழில்துறை பிரமுகர், டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைவர். (Photograph:Twitter)

ஆச்சார்யா ஸ்ரீ சந்தனாஜி தனது சமூகப் பணிக்காக பத்மஸ்ரீ விருது பெற்றார்.

ஆச்சார்யா பட்டம் பெற்ற முதல் ஜெயின் சாத்வி இவர் ஆவார். வீரயாடனின் நிறுவனர், பீகார், குஜராத், ராஜஸ்தான், நேபாளம் மற்றும் பல இடங்களில் கல்வி மையங்களை நிறுவியுள்ளார்.

(புகைப்படம்: ட்விட்டர்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link