சனி செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் அசுப யோகம்: இந்த ராசிகளுக்கு ஹை அலர்ட் நேரம்!!

Mon, 15 May 2023-6:14 pm,

ஷடாஷ்டக யோகம் : ஷடாஷ்டக் யோகம் அசுபமாக கருதப்படுகிறது. செவ்வாய் ஜூன் 30 வரை கடக ராசியில் இருப்பார். அதுவரை ஷடாஷ்டக யோகமும் இருக்கும். இதனால் சில ராசிக்காரர்கள் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஜூன் 30 வரையிலான காலம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிரமங்களைத் தரும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

கடகம்: கடகத்தில்தான் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. எனவே, அதன் அசுப பலன்கள் கடக ராசிக்காரர்களுக்கு தெரியும். இவர்கள் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். முதலீடு செய்வதில் தவறில்லை. வீட்டில் ஒருவருடன் தகராறு ஏற்படலாம்.

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகம் பிரச்சனைகளை தரும். சனி இதுவரை செய்த தீய செயல்களுக்கு அசுப பலன்களை தருவார். ஏதாவது ஒரு வழக்கில் சிக்கிக் கொள்ளலாம். பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். சர்ச்சையில் இருந்து விடுபட எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றியடையாமல் போகும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். 

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகம் மன அழுத்தத்தைத் தரும். நீங்கள் நிபுணர்களின் உதவியை நாட வேண்டியிருக்கலாம். முதலீடு செய்யாதீர்கள், அப்படி செய்தால் நன்றாக சிந்தித்து செய்யவும். நெருங்கிய நபர் உங்களை ஏமாற்றலாம்.

கும்பம்: கும்பத்தில் சனி இருப்பதால் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. இந்த யோகம் உங்களுக்கு காயத்தையும் மன அழுத்தத்தையும் தரும். எனவே கவனமாக வேலை செய்யுங்கள். வாகனம் ஓட்டும்போதும் கவனம் தேவை. உடல்நல தொந்தரவு வரலாம். ஒரு சிறிய விஷயம் கூட பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்.

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த  தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link