முதல் டெஸ்ட்டிலேயே சதம் அடித்து அசத்தல்! யார் இந்த கம்ரான் குலாம்?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் 2வது டெஸ்டில் அணியில் பல மாற்றங்களை செய்தது. பாபர் அசாமிற்கு பதிலாக கம்ரான் குலாம் சேர்க்கப்பட்டார்.
முதல்தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய கம்ரான் குலாம் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தி உள்ளார். மாற்று வீரராக வந்து அணியில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.
பாகிஸ்தான் முதல்தர கிரிக்கெட்டில் கம்ரான் குலான் பல சாதனைகளை செய்துள்ளார். 59 முதல் தர போட்டிகளில் விளையாடி 49.17 சராசரியில் 20 அரை சதங்கள் மற்றும் 16 சதங்கள் உட்பட 4377 ரன்கள் அடித்துள்ளார்.
தற்போது 29 வயதான குலாம் 2013/14ம் ஆண்டு க்வாய்ட்-இ-ஆசாம் டிராபியில் அபோட்டாபாத் அணிக்காக அறிமுகமானார். முதல் டெஸ்டிலேயே சிறப்பாக விளையாடி உள்ள குலாம் அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
1000 நாட்களுக்கு மேலாக சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறாமல் இருந்து வருகிறது. இதனால் கம்ரான் குலாமின் இந்த சதம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. எனவே 2வது போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று போராடி வருகிறது.