கோலியால் துவண்டுபோன பாகிஸ்தான் பவுலருக்கு நிக்காஹ் - புகைப்படங்கள் இதோ!

Sun, 25 Dec 2022-2:27 pm,

ஹாரிஸ் ரௌஃப் தனது நெருங்கிய தோழியான முஸ்னா மசூத் மாலிக் என்பவரை இன்று மணந்துகொண்டார். 

இவரது திருமண விழாவில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, பாக். பந்துவீச்சாளர் ஷாகின் அஃப்ரிடி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.

ஹாரிஸ் ரௌஃப் தற்போது காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். 

டி20 உலகக்கோப்பையில் பரபரப்பாக நடைபெற்ற இந்திய - பாகிஸ்தான் போட்டியில் முக்கிய ஓவரான 19ஆவது ஓவரை ஹாரிஸ் ரௌஃப் தான் வீசியிருந்தார். அதில், கடைசி இரண்டு பந்துகளில் விராட் கோலி இரண்டு சிக்ஸர்களை அடித்து மிரட்டியிருந்தார். கோலி அடித்த அந்த இரண்டு சிக்ஸர்களை பலரின் மனதையும் பறித்த நிலையில், ஹாரிஸ் ரௌஃப்-ன் பல நாள் தூக்கத்தையும் பறித்து சென்றது. 

தற்போது இவருக்கு திருமணம் ஆகியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link