நாடு உருவானதில் இருந்து முன்கூட்டியே பதவி இழந்த பாகிஸ்தான் பிரதமர்கள்
லியாகத் அலி கான், ஆகஸ்ட் 1947 இல் பதவியேற்ற பாகிஸ்தானின் முதல் பிரதமர் ஆவார். அவர் அக்டோபர் 16, 1951 அன்று ஒரு அரசியல் பேரணியில் படுகொலை செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் நீடித்தது.
(Photograph:AFP)
கவாஜா நஜிமுதீன் அக்டோபர் 17, 1951 அன்று பதவியேற்றார். மதக் கலவரங்களை தவறாக நிர்வகித்த குற்றச்சாட்டின் பேரில் ஏப்ரல் 17, 1953 அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் ஓராண்டு ஆறு மாதங்கள். (Photograph:AFP)
முகமது அலி போக்ரா ஏப்ரல் 17, 1953 இல் பதவியேற்றார் மற்றும் ஆகஸ்ட் 11, 1955 அன்று ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் நீடித்தது. (Photograph:AFP)
சௌத்ரி முகமது அலி ஆகஸ்ட் 1955 இல் பதவியேற்றார். உட்கட்சி பூசலால் செப்டம்பர் 12, 1956 இல் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது பதவிக் காலம் ஒரு வருடம் மற்றும் ஒரு மாதம். (Photograph:AFP)
ஹுசைன் ஷஹீத் சுஹ்ரவர்தி செப்டம்பர் 12, 1956 அன்று பதவியேற்றார். நாட்டின் பிற அதிகார மையங்களுடனான கருத்து வேறுபாடு காரணமாக அவர் பதவியில் இருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டார். அக்டோபர் 18, 1957 அன்று பதவி விலகிய அவரது பதவிக்காலம் ஒரு வருடம் மற்றும் ஒரு மாதம். (Photograph:AFP)
இப்ராகிம் இஸ்மாயில் சுந்திரிகர் அக்டோபர் 1957 இல் பதவியேற்றார் மற்றும் டிசம்பர் 16, 1957 அன்று ராஜினாமா செய்தார். அவர் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொண்டார். அவரது பதவிக் காலம் இரண்டு மாதங்களுக்கும் குறைவாக இருந்தது.
(Photograph:AFP)
நூருல் அமீன் டிசம்பர் 7, 1971 இல் பதவியேற்றார் மற்றும் 1971 டிசம்பர் 20ம் தேதியன்று, பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் பிரிந்த சிறிது நேரத்திலேயே பதவியில் இருந்து விலகினார். அவரது பதவிக்காலம் இரண்டு வாரங்களுக்கும் குறைவாக இருந்தது. (Photograph:AFP)
சுல்பிகர் அலி பூட்டோ ஆகஸ்ட் 14, 1973 இல் பதவியேற்றார். அவர் ஜூலை 5, 1977 இல் இராணுவ புரட்சி மூலம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இறுதியில் சிறையில் அடைக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள். (Photograph:AFP)
முஹம்மது கான் ஜுனேஜோ மார்ச் 1985 இல் பதவியேற்றார். அவர் மே 29, 1988 அன்று இராணுவத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் இரண்டு மாதங்கள். (Photograph:Twitter)
பெனாசிர் பூட்டோ, கொல்லப்பட்ட பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவின் மகள் மற்றும் முஸ்லீம் நாட்டின் முதல் பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் டிசம்பர் 2, 1988 இல் பதவியேற்றார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில், அவரது அரசாங்கம் ஆகஸ்ட் 6, 1990 அன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அவரது பதவிக்காலம் மூன்றாண்டுகள் மற்றும் சில நாட்கள் வரை நீடித்தது. (Photograph:AFP)
நவாஸ் ஷெரீப் 1997 பிப்ரவரி 17ம் தேதியன்று இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தார். பாகிஸ்தான் வரலாற்றில் 3வது முறையாக 1999 அக்., 12ல் ராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் எட்டு மாதங்கள்.
ஜூன் 5, 2013 அன்று ஷெரீப் மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலை 28, 2017 அன்று சொத்து தகவல்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் நீடித்தது. (Photograph:Reuters)
ஜஃபருல்லா கான் ஜமாலி நவம்பர் 2002 இல் இராணுவ ஆட்சியின் போது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 26, 2004 இல் இராணுவத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக அவர் ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் ஒரு வருடம் ஏழு மாதங்கள். (Photograph:AFP)
யூசப் ரசா கிலானி மார்ச் 25, 2008 அன்று பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். "நீதிமன்ற அவமதிப்பு" குற்றச்சாட்டின் பேரில் 2012 இல் பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது பதவிக் காலம் நான்கு ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம்.
இம்ரான் கான் ஆகஸ்ட் 18, 2018 அன்று பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்ரல் 10, 2022 அன்று எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து வெளியேறினார். அவரது பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஏழு மாதங்கள் மட்டுமே நீடித்தது. (Photograph:Reuters)
பாகிஸ்தான் உருவானது முதல் இதுவரை அந்நாட்டு பிரதமர்களின் பதவிக்காலம் முன்கூட்டியே முடிவடைந்தது. அந்நாட்டின் 75 ஆண்டுகால வரலாற்றில் எந்தப் பிரதமரும் ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை