உலக கோப்பை 2023: என்னது மெனுவில் பீப் இல்லையா? பாகிஸ்தான் வீரர்கள் ஷாக்
பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணி புதன்கிழமை பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் இந்தியா வந்தது.
அடுத்த நாள் அவர்கள் ஹைதராபாத்தில் தங்கள் முதல் நெட்ஸ் செஷனை தொடங்கினர்.
அவர்கள் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் முதல் ஆட்டத்தை நெதர்லாந்துக்கு எதிராக அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்க உள்ளனர்.
அதற்கு முன், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் பாகிஸ்தான் விளையாடுகிறது.
ஹைதராபாத் விமான நிலையத்தில் தங்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டதாக பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் சமூக ஊடக பக்கங்களில் தெரிவித்தனர்.
ஹோட்டலிலும் அவர்களுக்கான வரவேற்பு மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. அவர்களுக்கான மெனுவில் சிக்கன், ஆட்டிறைச்சி மற்றும் மீன் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்களின் விருப்ப உணவான பீப் மறுக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் மெனுவில் சேர்க்கவில்லை.
பாகிஸ்தான் அணிக்கு மட்டுமில்லை, உலக கோப்பையில் பங்கேற்கும் எந்த அணி வீரர்களும் பீப் சாப்பிட முடியாது.