பாரீஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் : சீனா முதலிடம், ஆஸி இரண்டாவது இடம் - இந்தியா இடம் தெரியுமா?
எப்போதும் ஒலிம்பிக்கில் சீனாவுடன் போட்டி போட்டு பதக்க வேட்டை நடத்தும் அமெரிக்கா ஆரம்ப கட்டத்தில் பின்தங்கியே இருக்கிறது. 3 தங்கம், 6 வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் 5வது இடத்தில் இருக்கிறது.
விளையாட்டில் உலகில் மிகப்பெரிய திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸில் தொடங்கியுள்ளது. மூன்று நாட்கள் போட்டி நடந்து முடிந்து நான்காவது நாட்கள் போட்டி நடைபெற்று வருகின்றன.
இதில் வழக்கம்போல் சீனா பதக்க வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் தொடங்கிய மூன்று நாட்களிலேயே அந்நாடு இதுவரை 5 தங்கப்பதங்களை வென்றுள்ளது. அத்துடன் இரண்டு வெண்கலம், இரண்டு வெள்ளி என மொத்தம் 9 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் இருக்கிறது.
இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது. அந்நாடு மொத்தம் 4 தங்கப்பதக்கங்களையும் 3 வெள்ளியையும் கைப்பற்றி இருக்கிறது. 4 தங்கம் வென்றுள்ள ஜப்பான் மற்றும் கொரீயா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
கொரீயாவை விட ஒரு வெண்கலம் கூடுதலாக வென்றிருப்பதால் பதக்கப்பட்டியலில் ஜப்பான் மூன்றாவது இடத்திலும், தென்கொரீயா நான்காவது இடத்திலும் இருக்கின்றன.
எப்போதும் ஒலிம்பிக்கில் சீனாவுடன் போட்டி போட்டு பதக்க வேட்டை நடத்தும் அமெரிக்கா ஆரம்ப கட்டத்தில் பின்தங்கியே இருக்கிறது. 3 தங்கம், 6 வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் 5வது இடத்தில் இருக்கிறது.
பிரான்ஸ் 3 தங்கங்களுடன் 6வது இடத்திலும், இங்கிலாந்து, ஜெர்மனி தலா இரண்டு தங்கப்பதக்கங்களுடன் ஏழாவது, எட்டாவது இடத்தில் இருக்கின்றன. இத்தாலி, கஜகஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், பெல்ஜியம், ஹாங்காங் ஆகியவை முறையே தலா ஒரு தங்கப்பதங்களை வென்றுள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா ஒரு வெண்கலம் வென்று 23வது இடத்தில் இருக்கிறது. ஸ்விட்சர்லாந்து ஒரு வெண்கலம் வென்று, ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக பதக்கம் வென்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது.