புகைப்படங்கள்: இந்த வருடத்தில் மொத்தம் 5 கிரகணங்கள் - இன்று கடைசி கிரகணம்
2018 இல் 5 கிரகணங்கள் நிகழும் எனக் கூறப்படுகிறது. இந்த வருடத்தின் முதல் சூரியகிரகணம் பிப்ரவரி 15 ஆம் நாள், இரண்டாவது ஜூலை 13ம் நாள் நிகழ்ந்தது. தற்போது மூன்றாவது இன்று (ஆகஸ்ட் 11ம் நாள்) நிகழ உள்ளது. இந்த ஆண்டு 2 சந்திரகிரகணமும் நடந்துள்ளது. முதல் சந்திரகிரகணம் ஜனவரி 31 ஆம் தேதியும், இரண்டாவது சந்திரகிரகணம் ஜூலை 27 ஆம் தேதி நடந்தது.
இந்திய நேரப்படி மதியம் 1.32 மணிக்கு தொடங்கும் பகுதி நேர சூரியகிரகண நிகழ்வு மதியம் 3.16 மணி வரை நீடிக்கும். இந்தியாவை பொருத்த வரை தெளிவாக காண இயலாது.
இந்திய நேரப்படி மதியம் 1.32 மணிக்கு தொடங்கும் பகுதி நேர சூரியகிரகண நிகழ்வு மதியம் 3.16 மணி வரை நீடிக்கும். இந்தியாவை பொருத்த வரை தெளிவாக காண இயலாது. இந்த கிரகணம் கிட்டத்தட்ட 3.30 மணி நேரம் நடைபெறும்.
இந்த கிரகணம் வடக்கு மற்றும் கிழக் ஐரோப்பா, வடஅமெரிக்காவின் வடகிழக்கு பகுதியிலும், ஆசியாவை பொருத்த வரை வடக்கு மற்றும் மேற்கு இருக்கும் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தை பார்க்க இயலும்.
இந்த வருடத்தின் கடைசி கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்த கிரகணத்தை வெற்றுக் கண்ணால் பார்க்கக் கூடாது.
பொதுவாக கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது, வேலை செய்யக்கூடாது, வானத்தை பார்க்கப் கூடாது என்றெல்லாம் கூறப்படுகிறது. இது உண்மையா? என்பது நிருப்பிக்கபட வில்லை.