IRCTCயின் ஸ்ரீ ராமாயண் யாத்ரா ரயிலுக்கு அமோக வரவேற்பு

Mon, 08 Nov 2021-3:00 pm,

ஐஆர்சிடிசியின் ஸ்ரீ ராமாயண் யாத்ரா ரயிலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய இடங்களுக்கு செல்வதற்காக, ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயிலை IRCTC தொடங்கியுள்ளது. 

Source: Ministry of Railways Twitter

சுற்றுப்பயணத்தின் காலம் 17 நாட்கள். இந்திய ரயில்வேயின், ஸ்ரீ ராமாயண் யாத்ரா ரயிலில்  17 நாட்களில் அயோத்தி, சீதாமர்ஹி மற்றும் சித்ரகூட் போன்ற பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை தொடர்பான புண்ணியத் தலங்களுக்குச் சுற்றுப்பயணம் செல்ல முடியும்.  Source: IRCTC Twitter

இந்த பயணத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக, ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு தெரிவித்தது. சுற்றுலாப் பயணிகளின் தொடர்ச்சியான கோரிக்கைகள் காரணமாக, IRCTC டிசம்பர் 12, 2021 அன்று மீண்டும் இந்த சுற்றுப்பயண ரயில் இயங்கும்.  Source: IRCTC Twitter

இந்த சுற்றுலா ரயில், டீலக்ஸ் ஏசி ரயில் பெட்டிகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது.   Source: IRCTC Twitter

சுற்றுலாப் பயணிகளின் முதலில் அயோத்திக்குச் செல்லும், அங்கு அவர்கள் ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயில் மற்றும் ஹனுமான் கோயிலுக்குச் செல்வார்கள். நந்திகிராமில் உள்ள பாரத் மந்திருக்கும் இந்த ரயில் செல்கிறது Source: IRCTC Twitter

 

இந்த டீலக்ஸ் ரயில், ஜனக்பூர், சீதாமர்ஹி, காசி, பிரயாக், ஷ்ரிங்வர்பூர், சித்ரகூட், நாசிக், ஹம்பி மற்றும் ராமேஸ்வரம், ராமர் சென்ற பல முக்கியமான இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும். இறுதியாக ராமேஸ்வரத்துச் செல்லும் ரயில் 17 வது நாளில் டெல்லிக்கு திரும்பும்.  Source: IRCTC Twitter

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link