இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஓவரா கோபம் வருமாம்
மேஷம்: மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் கிரகம் என்பதால் இவர்கள் எப்போதுமே ஆக்ரோஷமாகவே காண்பார்கள். இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு முன்கோபம் அதிகம் உண்டு. இவர்களை சமாதானப்படுத்துவதும் மிகவும் கடினம்.
ரிஷபம்: காளையைப் போல் கடின உழைப்பாளிகள் ஆனால் சீக்கிரம் கோபம் கொண்டவர்கள் இந்த ராசிக்காரர்கள். இந்த ராசிக்காரர்கள் முன் தவறாக பேசுவது பிரச்சனைக்கு அழைப்பு விடுப்பது போல் ஆகும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு பொதுவாக கோபம் வராது ஆனால் அவர்களுக்கு கோபம் வந்தால் எரிமலை போல் வெடிப்பார்கள். இவர்களை சமாதானப்படுத்துவது மிகவும் கடினம்.
சிம்மம்: சிம்ம ராசியின் அதிபதி சூரியன். மற்ற ராசிக்காரர்களை விட இவர்களுக்கு அதிகம் கோபம் வரும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் மிகுந்த கோபத்துடன் இருப்பார்கள். அதுமட்டுமின்றி பழிவாங்குவதில் இவர்கள் சிறந்தவர்கள்.