ஷ்ஷ்.... இந்த ராசிக்காரங்ககிட்ட ரகசியத்த சொல்லாதீங்க!!
மேஷ ராசிக்காரர்கள் மிகவும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். அவர்களது உற்சாகத்தாலும், துடுக்குத்தனத்தாலும் சில சமயம் அவர்கள் குழம்பிப்போய் மற்றவர்களது ரகசியங்களை பலர் முன்னிலையில் வெளிப்படுத்தி விடுகிறார்கள். இந்த நபர்களுடம் தங்கள் ரகசியங்களை பகிர்ந்துகொள்வதை மற்றவர்கள் தவிர்க்க வேண்டும்.
மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் பேசுவதில் திறம் படைத்தவர்கள். இவர்களிடம் அனைவரும் எளிதில் நட்புகொள்வார்கள். இவர்கள் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுவார்கள். இதனால், மக்கள் இவர்களை எளிதில் நம்பி தங்கள் ரகசியங்களைச் சொல்லி விடுகிறார்கள். ஆனால், மிதுன ராசிக்காரகளுக்கு வம்பு பேசும் பழக்கமும் இருப்பதால், அவர்கள் ஒருவரது ரகசியங்களை மற்றவர்களிடம் கூறி விடுவார்கள்.
கடக ராசிக்காரர்களுக்கு தங்கள் மனம் மற்றும் பேச்சில் கட்டுப்பாடு இருக்காது. எதை சொல்லக்கூடாதோ அதை கண்டிப்பாக சொல்லி விடுவார்கள். ஒருவருடைய ரகசியத்தை பலர் முன்னால் கூறும்போதும் இவர்கள் யோசிப்பதில்லை. ஆகையால், இவர்களிடம் ரகசியங்களை சொல்வது நம் தலையை நாமே அடித்துக்கொள்வது போன்றது.
துலா ராசிக்காரர்கள் பேசுவதில் மிகவும் அற்புதமானவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் பேசி எளிதில் விஷயங்களைப் பெற்று விடுவார்கள். பின்னர் தங்கள் வசதிக்காக, இவற்றை சொல்லக்கூடாதவர்களிடம் சொல்லியும் விடுவார்கள். இந்த ராசிக்காரர்களை நம்புவதற்கு முன்னர் பலமுறை யோசிக்க வேண்டும்.
தனுசு ராசிக்காரர்கள் அனைவரையும் எளிதில் ஈர்த்து விடுவார்கள். மக்கள் தனுசு ராசிக்காரர்களை எளிதில் நம்பி விடுவார்கள். தனுசு ராசிக்காரர்கள் தெரிந்தோ தெரியாமலோ தங்கள் ரகசியங்களை மட்டுமல்லாமல் பிறரது ரகசியங்களையும் மற்றவர்களிடம் கூறி விடுகிறார்கள். பின்னர் அவதிப்படுகிறார்கள். இவர்களை நம்புவது பிரச்சனையை நாமே வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது போன்றதாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)