பேய் படங்களை விரும்பி பார்ப்பீர்களா? ‘இந்த’ மாதிரியான ஆளாக இருப்பீங்க!
த்ரில்லிங் பிடித்தவர்கள்:
பேய் படம் பிடித்தவர்களுக்கு த்ரில்லிங் அனுபவத்தில் இருக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் Adrenaline rush பிடிக்கும். பயத்தினால் வரும் அந்த அனுபவத்தை அவர்கள் மிகவும் விரும்புகின்றனர்.
சமூகத்துடன் ஒத்துப்போவது:
பேய் படம் பார்ப்பவர்கள், சமூகத்துடன் ஒத்துப்போகும் நபர்களாக இருப்பர். இவர்கள், பிறரை புரிந்து கொள்ளும் திறனும் அதிகமாக இருக்குமாம்.
எதிர்கொள்ளும் திறன்:
மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றை எதிர்கொள்ளும் மன திடத்தை, இவர்கள் வைத்திருப்பர். எந்த வகையான சூழ்நிலைகள் வந்தாலும் இவர்களுக்கு அதை எதிர்கொள்ள தெரியும்.
திறந்த மனம்:
பேய் படம் பிடித்தவர்கள், திறந்த மனம் படைத்தவர்களாக இருப்பர். பேய் படங்களில் விவாதிக்கப்படும் விஷயங்கள் போல, நிஜ வாழ்வில் பெரிதும் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்தும் இவர்கள் விவாதிக்க விரும்புவர்.
கற்பனை திறன்:
பேய் படங்களை பார்ப்பவர்களுக்கு, கற்பனை திறன் அதிகமாக இருக்குமாம். பேய் படங்கள் இவர்களுக்கு நிறைய கற்பனை வளத்தை அதிகரிக்க உதவுமாம்.
நகைச்சுவை திறன் மிக்கவர்கள்:
பேய் படம் பார்ப்பவர்களுக்கு நகச்சுவை திறன் அதிகமாக இருக்குமாம். இதனால், இவர்களை சுற்றி இருப்பவர்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பர்.
ஆர்வம்:
பேய் படங்களை பார்ப்பவர்கள், ஆர்வம் நிறைந்தவர்களாகவும் இருப்பர். தெரியாததை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு மேலோங்கி இருக்கும்.
சிக்கலை தீர்ப்பவர்கள்:
ஒரு சிலருக்கு, தன்னிடம் வரும் சிக்கலை தீர்ப்பதற்கு மிகவும் பிடிக்கும். இது போன்ற ஆட்களுக்கும் பேய் படங்கள் மிகவும் பிடிக்குமாம்.