உங்கள் பகுதியில் Petrol-Diesel விலையை எவ்வாறு தெரிந்துக்கொள்வது!

Wed, 03 Mar 2021-12:02 pm,

அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கவனத்தில் கொண்டு, நீங்கள் உங்கள் வாகனத்தில் பெட்ரோல் போடுவதற்கு முன்பே, உங்கள் பகுதியில் பெட்ரோல் டீசல் விலையைக் குறித்து அறிந்துக்கொள்வது முக்கியமாகும்.

SMS மூலம் பெட்ரோல் டீசலின் விலையை நீங்கள் அறியலாம். பெட்ரோல் டீசல் விலை தினமும் காலை 6 மணிக்கு புதுப்பிக்கப்படும்.

இந்தியன் ஆயிலின் வலைத்தளத்தின்படி, நீங்கள் உங்கள் நகரக் குறியீட்டை RSP-யுடன் தட்டச்சு செய்து 9224992249 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நகர குறியீடும் வேறுபட்டது. ஐ.ஓ.சி.எல் வலைத்தளத்திலிருந்து இதை பெறலாம். 

உங்கள் நகரத்தில் பெட்ரோல் டீசல் விலையை BPCL வாடிக்கையாளர் RSP 9223112222 மற்றும் HPCLவாடிக்கையாளர் HP Price-க்கு 9222201122 செய்தியை அனுப்புவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்

 

சென்னையில் (Chennai) பெட்ரோல் ரூ. 93.11 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 86.45 ஆகவும் உள்ளது (மார்ச் 3, 2021)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link