செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க ‘5’ சூப்பர் டிப்ஸ் ..!!!

Mon, 10 Jan 2022-6:15 pm,

Google Maps போன்ற பயன்பாடுகளுக்கு லொகேஷன் சர்வீஸ் உதவியாக இருக்கும், ஆனால் அந்த GPS பிங்கள் பேட்டரியை அதிகம் எடுத்துக் கொள்ளும். செட்டிங்க்ஸ் > பிரைவஸி > லொகேஷன் சர்வீஸ் சென்று ஆப் செய்யவும். 

பேட்டரி திறன் வீணாவதை தடுக்க லோ பவர் மோட் என்னும் பயன்முறையை செயல்படுத்தவும். இது இயக்கப்பட்டால், உங்கள் ஃபோன் மிகவும் அத்தியாவசியமான பணிகளை மட்டுமே செய்கிறது, எனவே பதிவிறக்கங்கள் மற்றும் நோடிபிகேஷன் பெறுதல் போன்ற பின்னணி செயல்பாடுகள் முடக்கப்படும்.

 

ஸ்மார்ட்ஃபோன் டிஸ்ப்ளேக்கள் பெரியதாகவும் பிரகாசமாகவும் உள்ளன, ஆனால் இரவில் இந்த திரைகள் உங்கள் பேட்டரி ஆயுளைக் குறைக்கின்றன. இதனை தடுக்க, ஆட்டோ-பிரைட்ன்ஸ் என்ற அம்சத்தை இயக்கவும். Settings > Accessibility > Display & text size > Auto-brightness என்பதற்குச் சென்று அதை இயக்கவும். உங்கள் தற்போதைய லைட்டிங் நிலைமைகளின் அடிப்படையில் உங்கள் ஃபோன் அதன் பிரகாசத்தை சரிசெய்யும். உங்களிடம் போதுமான வெளிச்சம் இருந்தால், பேட்டரியைச் சேமிக்க திரை தானாகவே அணைக்கப்படும்.

உங்கள் செயலிகள் மற்றும் இயங்குதளத்தை அப்டேடட் நிலையில் வைத்திருப்பது எப்போதும் நல்லது. சில புதுப்பிப்புகள் மூலம் செயலிகள் வேகமாகவும் மென்மையாகவும் இயங்க உதவுகின்றன. இருப்பினும், இந்த செயல்முறை பேட்டரி திறனை அதிகம் எடுத்துக் கொள்ளும், எனவே Settings > App Store > App Updates என்பதற்குச் சென்று அதை ஆப் செய்யவும். நீங்களே அவ்வப்போது செயலிகளை மேனுவலாக அப்டேட் செய்து கொள்ளலாம்.

உங்கள் பேட்டரி முற்றிலும் தீர்ந்து போகும் நிலை இருந்தால், உங்கள் சாதனத்தை ஏர்பிளேன் மோட் பயன்முறையில் வைக்கவும், இது உங்கள் மொபைலில் உள்ள அனைத்து வயர்லெஸ் அம்சங்களையும் முடக்கும். அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வராது, ஆனால் பிற செயல்பாடுகளுக்கு தேவைப்பட்டால் Wi-Fi உடன் இணைக்கலாம். இதைச் செய்வதற்கான எளிதான வழி, கண்ட்ரோல் செட்டிங்கில் உள்ள விமான ஐகானை ஆன் செய்யலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link