Phool-proof: கங்கையின் கழிவுகள் மணக்கும் ஊதுபத்தியாக மாறும் மாயம்
Phool.co initiative என்ற முயற்சியை மேற்கொண்டுள்ளார் அங்கித் அகர்வால் (Ankit Agarwal). இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவின் புனித கங்கை நதியை சுத்தம் செய்ய 100 பெண்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
(Photograph:Reuters)
முதலாவதாக, கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில்களுக்கு வெளியே குவியும் மலர் கழிவுகள் அகற்றப்படுகின்றன. கங்கை நதியில் மாசு ஏற்படுத்தும் பொருட்களில் முக்கியமானது மலர் கழிவு. இந்திய பாரம்பரியத்தில் கோவில்களில் பூக்களைக் கொண்டு வழிபாடு செய்வதே வழக்கம். இந்திய நாட்டின் ஆறுகளில் கிட்டத்தட்ட எட்டு மில்லியன் டன் மலர்கள் கலக்கின்றன. இந்திய நதியில் கழிவுநீர் மற்றும் தொழில்துறை மற்றும் பிற கழிவுகளும் கலந்து நீர் மாசு அதிகமாகிறது.
(Photograph:Reuters)
பின்னர், கோவில்களின் வெளியே இருந்து சேகரிக்கப்படும் பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் தூளை பிசைந்து, அவற்றில் இருந்து தூபக் குச்சிகளைத் தயாரிக்கிறார்கள். பயன்படுத்திய பூக்களில் இருந்து மாலைகள் மற்றும் வண்ணங்களையும் இந்த குழுவினர் உருவாக்குகின்றனர்.
(Photograph:Reuters)
ஊதுபத்தி குச்சிகளின் காகிதத்தில் துளசி விதைகளும் சேர்க்கப்படுகிறது. "இந்த தயாரிப்புகளை நாங்கள் பயன்படுத்தியவுடன், தயவுசெய்து இதை விதைக்கவும், நாம் வெளியேற்றும் கழிவின் மூலமும் புனிதமான துளசியை உருவாக்கும் முயற்சி இது. அதிலிருந்து வளரும், இந்த உண்மையில் இது எங்கள் பிராண்டை நிறுவ எங்களுக்கு உதவியது" என்று அகர்வால் கூறுகிறார்.
(Photograph:Reuters)
Phool.coவுக்கு டாடா வணிகக் குழுவின் சமூகப் பிரிவின் முதலீட்டைப் பெற்றுள்ளது. கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மற்றும் வேலை இல்லாமல் இருந்தவர்கள்ளுக்கு இந்த அமைப்பு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கிறது.
(Photograph:Reuters)