உடனடி PAN Card-க்கு விண்ணப்பிக்க வேண்டுமா: இந்த முறையில் நிமிடங்களில் பெற்று விடலாம்!!
வருமான வரித் துறையின் மின்-தாக்கல் போர்டல் மூலம், உங்கள் ஆதார் இணைப்பின் உதவியுடன் உடனடியாக PAN கார்ட்டைப் பெறலாம். இதற்காக, முதலில் நீங்கள் போர்ட்டலுக்குச் சென்று அங்குள்ள ‘Get New PAN’ ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும். உங்களிடம் உங்கள் ஆதார் எண் கேட்கப்படும். ஆதார் எண்ணை உள்ளிடும்போது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். OTP ஐ உள்ளிட்ட பிறகு, உங்கள் ஆதார் எண் UIDAI தரவுத்தளத்திலிருந்து சரிபார்க்கப்படும். அதன் பிறகு உங்கள் பான் அட்டை வழங்கப்படும்.
பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு PDF வடிவத்தில் பான் அட்டை கிடைக்கும். இது ஒரு QR குறியீட்டைக் கொண்டிருக்கும். இந்த குறியீட்டில், உங்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் போன்ற முக்கியமான தகவல்கள் இருக்கும். உங்கள் e-PAN-ஐ நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். உங்கள் விண்ணப்ப செயல்முறை முடிந்ததும், உங்களுக்கு 15 இலக்க பதிவு எண் கிடைக்கும். உங்கள் பான் அட்டையின் சாஃப்ட் காபியும் உங்கள் மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
NSDL மற்றும் UTITSL மூலமாகவும் பான்கார்ட் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களும் இந்த வசதிக்காக சில கட்டணம் வசூலிக்கின்றன. மறுபுறம், நீங்கள் வருமான வரித் துறை போர்ட்டல் மூலம் பான் கார்டைப் பெற்றால், நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
வருமான வரி வலைத்தளம் மூலம் வழங்கப்படும் உடனடி பான் வசதி மூலம் பான் கார்டுக்கு விண்ணப்பித்தால், விவரப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் தகவல்கள் அனைத்தும் ஆதார் அட்டையிலிருந்து எடுக்கப்பட்டும். அதே நேரத்தில், உங்கள் பான் தானாகவே ஆதார் உடன் இணைக்கப்படும்.
உடனடி பான் வசதியின் கீழ் பான் கார்டை வழங்க சுமார் 10 நிமிடங்களே ஆகும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இந்த வசதியின் கீழ் இதுவரை சுமார் 7 லட்சம் பான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.