7th Pay commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்ததை விட முன்னரே கிடைக்கும் DA Hike!!

Sat, 09 Jan 2021-4:02 pm,

நான்கு சதவீத DA உயர்வு இந்த மாதத்திலேயே மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பொருளாதார நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்னேற்றத்தை பதிவு செய்து கொண்டிருப்பதால், இதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கைகள் ஆதாரங்களைக் காட்டுகின்றன. மேலும் மேம்பட்டு வரும் பொருளாதார சூழ்நிலையால் நரேந்திர மோடி அரசாங்கம் இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னரே DA அதிகரிப்பை அளிக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் -19 தொற்றுநோயால் கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் நான்கு சதவீத DA நிறுத்தி வைக்கப்பட்டது. ஜூலை 2021 வரை 17 சதவீதம் என்ற பழைய வீதத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்வதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. தற்போது வந்திருக்கும் அறிக்கைகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் 17 சதவீதத்திலிருந்து 21 சதவீதம் DA உயர்வைப் பெறுவார்கள்.

இதற்கிடையில், ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF), எல்லை பாதுகாப்பு படை (BSF) உள்ளிட்ட ஆயுதப்படைகளுக்கு சில சீர்திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பணியில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் 'ஊனமுற்றோர் இழப்பீடு' வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடமையை செய்யும்போது அவர்கள் ஊடமுற்று தொடர்ந்து பணி செய்து கொண்டிருந்தால், இது அவர்களுக்கு பொருந்தும். இது விதிகளை எளிமைப்படுத்துவதற்கும் பாரபட்சமான உட்பிரிவுகளை சரிசெய்வதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது.

ஒரு அரசு ஊழியர் உடல் அல்லது மருத்துவ குறைபாடு காரணமாக இயலாமை மற்றும் மருத்துவ உடல்நல குறைபாடு காரணமாக அரசு சேவையில் இருந்து ஓய்வு பெற்றால், அவர் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதியையும் சமீபத்தில் பணியாளர் அமைச்சகம் விலக்கிக் கொண்டது.

கூடுதலாக, ஓய்வூதிய விதிகளில் மற்றொரு சீர்திருத்தமும் செய்யப்பட்டது. குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் தேவையான சேவையை நிறைவு செய்வதற்கு முன்னர், சேவையின் போது இறந்த ஒரு ஊழியரின் குடும்பத்திற்கு மேம்பட்ட விகிதத்தில் ஓய்வூதியம் வழங்கவும் விதிகளை திருத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link