Aadhaar Update: இனி வாரத்தின் 7 நாட்களும், உங்கள் சேவையில் உங்கள் மொழியில் ஆதார்!!
)
உங்கள் ஆதார் அட்டை தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் திங்கள் முதல் சனி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், அதாவது வாரத்தின் ஏழு நாட்களிலும் குறிப்பிட்ட நேரத்தில் பதில் அளிக்கப்படும்.
)
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இப்போது உங்கள் மொழியில் அனைத்து வித உதவிகளையும் வழங்குகிறது. இது தோடர்பான அறிவிப்பை UIDAI வெளியிட்டுள்ளது.
)
ஆதார் அட்டை தொடர்பான உங்களது அனைத்து சிக்கல்களுக்கும் நீங்கள் தீர்வு காண விரும்பினால், 1947 என்ற ஆதார் ஹெல்ப்லைன் எண்ணுக்கு டயல் செய்யவும். UIDAI இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அசாமி, உருது ஆகிய 12 மொழிகளில் இதில் உங்களுக்கு தேவையான உதவியை வழங்குகிறது.
‘ஆதார் ஹெல்ப்லைன் உங்களுக்கு வாரம் முழுதும் உதவ தயாராக உள்ளது. கொடுக்கப்பட்டுள்ள நேரத்தில் 1947 என்ற எண்ணில் அழைத்து உதவி பெறலாம்’ என UIDAI தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
எந்த நேரத்தில் உதவி பெறலாம்:
ஆதார் தொடர்பான எந்தவொரு சந்தேகத்திற்கும் நீங்கள் 1947 என்ற எண்ணிற்கு, இந்த நேரங்களில் அழைக்கலாம்:
திங்கள் முதல் சனிக்கிழமை வரை நேரம் - காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை
ஞாயிற்றுக்கிழமை நேரம் - காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) என்பது ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகள்) சட்டம், 2016-ன் (“ஆதார் சட்டம் 2016”) கீழ், 12 ஜூலை 2016 அன்று அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு சட்ட ரீதியான அதிகார அமைப்பாகும். இந்தியாவின், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் (MeitY) இது செயல்படுகிறது. ஆதார் சட்டம் 2016, ஆதார் மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) சட்டம், 2019 (2019 இன் 14) மூலம் 25.07.2019 முதல் திருத்தப்பட்டுள்ளது.