கடலுக்குள்ள கேபினட் மீடிங் நடத்திய ஆசியாவின் மிகச்சிறிய நாடு எது தெரியுமா

Fri, 13 Nov 2020-5:41 pm,

உலகில் அளவில் சிறியதாக, அதிக மக்கள் தொகை இல்லாத பல நாடுகள் உள்ளன. ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள வேடிகன் சிடி உலகின் மிகச்சிறிய நாடாகக் கருதப்பட்டாலும், ஆசியா கண்டத்தின் மிகச்சிறிய நாடு எது என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்த நாடு மிகவும் அழகான ஒரு நாடாகும். இது இலங்கையிலிருந்து சுமார் 983 கி.மீ தூரத்திலும், இந்தியாவின் லட்சத்தீவிலிருந்து 793 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

இந்த நாட்டின் பெயர் மாலத்தீவு. 1965 ஆம் ஆண்டில், இது ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இந்த நாட்டை முதலில் அங்கீகரித்த நாடு இந்தியா. நவம்பர் 11, 1968 அன்று, இங்கு 853 ஆண்டுகள் பழமையான முடியாட்சி ஒழிக்கப்படு மாலத்தீவு குடியரசாக அறிவிக்கப்பட்டது. மக்கள்தொகை மற்றும் பரப்பளவில் ஆசியாவின் மிகச் சிறிய நாடு இதுதான். 2016 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மொத்த மக்கள் தொகை சுமார் நான்கு லட்சம் 28 ஆயிரம் ஆகும்.

அடிப்படையில் மாலத்தீவுகள் ஒரு தீவுக் குழு. இங்கு மொத்தம் 1,192 தீவுகள் உள்ளன. அவற்றில் 200 தீவுகள் மட்டுமே உள்ளூர் குடியேற்றத்தைக் கொண்டுள்ளன. சில சுற்றுலாப் பயணிகளுக்காக உள்ளன. இங்கு அழகான ரிசார்ட்கள் மற்றும் ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளன. ஒரு மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு லட்சம் சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு வருகை தருகிறார்கள்.

மாலத்தீவு துவக்கத்திலிருந்து அப்படி இல்லை. 12 ஆம் நூற்றாண்டு வரை நாடு இந்து மன்னர்களின் கீழ் இந்த நாடு இருந்தது. ஆனால் பின்னர் அந்நாடு பௌத்த மதத்தின் மையமாக மாறியது. காலப்போக்கில் அது முற்றிலும் ஒரு முஸ்லீம் தேசமாக மாற்றப்பட்டது. இங்கே மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், முஸ்லிம் அல்லாதவர்கள் மாலத்தீவின் குடிமகனாக மாற முடியாது.

உலகில் உள்ள அனைத்து தீவு நாடுகளிலும் மாலத்தீவு மிகக் கீழே உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. எப்போதாவது சுனாமி ஏற்பட்டால், இந்த நாட்டின் பெரும்பகுதி மூழ்கிவிடும். உலகின் முதல் முறையாக நீருக்கடியில் அமைச்சரவைக் கூட்டம் மாலத்தீவிலேயே நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டில் நடந்த அந்த கூட்டத்திற்கு அப்போதைய அதிபர் முகமது நஷீத் தலைமை தாங்கினார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link