நம்ப முடியாத சலுகை: வெறும் 9 ரூபாய்க்கு Gas Cylinder வாங்க இதை செய்தால் போதும்

Fri, 02 Apr 2021-3:23 pm,

இந்த சலுகையைப் பெற, உங்கள் மொபைலில் Paytm செயலியை (Paytm App) இன்ஸ்டால் செய்ய வேண்டும். செயலியை பதிவிறக்கிய பிறகு, உங்கள் எரிவாயு நிறுவனத்திலிருந்து சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும். முதலில், நீங்கள் Paytm க்குச் சென்று ’ஷோ மோர்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, ரீசார்ஜ் மற்றும் பே பில்கள் என்பதைக் கிளிக் செய்யவும். இதில் நீங்கள் சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான விருப்பத்தை பெறுவீர்கள்.

இங்கே நீங்கள் உங்கள் எரிவாயு வழங்குநரை தேர்வு செய்ய வேண்டும். முன்பதிவு செய்வதற்கு முன், நீங்கள் FIRSTLPG என்ற விளம்பர குறியீட்டை உள்ளிட வேண்டும். இதன் மூலம் நீங்கள் கேஷ்பேக் வசதியைப் பெற முடியும்.

இந்த கேஷ்பேக் சலுகை 30 ஏப்ரல் 2021 அன்று காலாவதியாகிறது. முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் கேஷ்பேக் ஸ்க்ரேட்ச் கார்ட் கிடைக்கும். இந்த ஸ்க்ரேட்ச் கார்டை 7 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

நான்கு மெட்ரோ நகரங்களில் எல்பிஜி விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மானியமில்லாத 14.2 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ .809 ஆகவும், கொல்கத்தாவில் ரூ .835.50 ஆகவும், மும்பையில் ரூ .809 ஆகவும், சென்னையில் ரூ .825 ஆக உள்ளது.  19 கிலோ வணிக எரிவாயு விலையில் மாற்றம் இல்லை 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. டெல்லியில் 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ .1641, கொல்கத்தாவில் ரூ .1713, மும்பையில் ரூ .1590.50, சென்னையில் ரூ .1771.50 ஆக உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link