கொய்யா இலையில் இத்தனை நன்மைகளா!! ஒரே இலையில் இத்தனை தீர்வா!!

Sat, 31 Oct 2020-5:29 pm,

கொய்யாவைப் போலவே, அதன் இலைகளும் மிகவும் பயனுள்ளவை.

கொய்யாவின் இலைகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவை பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் வல்லமைக் கொண்டவை. இதய நோய்களிலிருந்தும் கொய்யா பழம் நம்மை பாதுகாக்கிறது.

கொய்யா இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், அவற்றை கொதிக்க வைத்து அந்த நீரைக் குடிப்பதால் வயிற்று வலி நீங்கும். வாந்தி சங்கடமும் சரியாகும். இதற்கு, நீங்கள் கொய்யாவின் 5-6 இலைகளை 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின்னர் அதை வடிகட்டி அதன் தண்ணீரை குடிக்க வேண்டும்.

மூட்டு வலிக்கும் கொய்யா இலைகள் நன்மை பயக்கும். கொய்யா இலைகளை அரைத்து, விழுதாக்கி அதை மூட்டுகளில் தடவ வேண்டும். இதன் மூலம் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

கொய்யா இலைகளின் நீர், நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது தவிர, உடலில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாறுவதையும் இது தடுக்கிறது. இதன் மூலம் எடையைக் குறைக்கவும் இது உதவுகிறது.

கொய்யா இலைகளின் நீர் பல்வலி, ஈறு அழற்சி மற்றும் வாய் புண் ஆகியவற்றைப் போக்க உதவுகிறது. கொய்யா இலைகளை வேகவைத்து, அவற்றை தண்ணீரில் கலந்தது, வடிகட்டி அதை ஈறு மற்றும் பல்லில் படும்படி சிறிது நேரம் வைத்திருக்கலாம். இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, அந்த நீரால் வாய் கொப்பளித்தாலும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

குறிப்பு: இந்த அறிவுரை உங்களுக்கு பொதுவான தகவல்களை வழங்க மட்டுமே கொடுக்கப்படுகிறது. எதையும் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது நிபுணரை அணுக வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link