இனி ரயில் பயணத்திற்கு அதிகமாக செலவாகும்: டிக்கெட் costly ஆவதன் காரணம் என்ன

Thu, 18 Feb 2021-8:46 pm,

ரயில் நிலையங்களில் பயணிகளிடமிருந்து பயனர் மேம்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க கூடிய விரைவில் ஆணை பிறப்பிக்கப்படலாம். அதன் பிறகு அது செயல்படுத்தப்படும். அதாவது, அடுத்த முறை நீங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, ​​உங்களிடம் UDF கட்டணம் வசூலிக்கப்படலாம். இது உங்கள் ரயில் பயணத்தின் விலையை உயர்த்தும்.

இப்போது அனைத்து நிலையங்களிலும் உள்ள அனைத்து பயணிகளிடமிருந்தும் UDF சேகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது. ‘இல்லை’ என்பதுதான் இதற்கான பதில். தனியார் நிறுவனங்கள் மூலம் புனரமைப்பு செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு வசதியாக இருக்கும் நிலையங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இந்த ரயில் நிலையங்களிலிருந்து நீங்கள் பயணம் செய்தால், நீங்கள் UDF கொடுக்க வேண்டும். சுமார் 700-1000 ரயில் நிலையங்களில் UDF வசூலிக்கப்படும் என ரயில்வே வாரிய தலைமை நிர்வாக அதிகாரி வி.கே.யாதவ் கூறுகிறார். தற்போது, ​​62 நிலையங்கள் முதல் கட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை மறு அபிவிருத்திக்கு வழங்கப்படும். இதில் புது தில்லி, மும்பை, நாக்பூர், இந்தூர் மற்றும் சண்டிகர் ஆகிய இரயில் நிலையங்கள் அடங்கும்.

பயனர் மேம்பாட்டுக் கட்டணம் (UDF) எவ்வளவு வசூலிக்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும், இந்த கட்டணம் ஒரு டிக்கெட்டுக்கு ரூ .30-40 ஆக இருக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், UDF வெவ்வேறு வகைகளுக்கு ஏற்ப மாறுபடும்.

 

அதிகபட்ச கட்டணம் AC1 இல் விதிக்கப்படும், AC2 க்கு குறைவாகவும், AC3 இல் மிகக் குறைவாகவும் இந்த கடணம் விதிக்கப்படும். ஆதாரங்களின்படி, யுடிஎஃப் பொது டிக்கெட்டில், அதாவது ஜெனரல் டெக்கெட்டில் வசூலிக்கப்படாது. UDF பயண டிக்கெட்டுகளில் மட்டுமல்லாமல், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளிலும் சேர்த்து வசூலிக்கப்படலாம்.

இருப்பினும், ரயில்வே வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வி.கே. யாதவ் கூறுகையில், சாமானியர்களுக்கு சுமையை அதிகரிக்காத வகையில்தான் UDF வசூலிக்கப்படும் என்றார். இதன் கட்டணம் குறைவாகவே இருக்கும் என்றார் அவர். மறு அபிவிருத்தி மாதிரியில் பல ரயில் நிலையங்கள் ஏலம் எடுக்கப்படுவதால், UDF பற்றிய அறிவிப்பை விரைவில் அறிவிக்க அரசாங்கம் விரும்புகிறது. இதனால் ஏல செயல்முறையில் அதிகமான தனியார் நிறுவனங்கள் பங்கேற்பார்கள் என நம்பப்படுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link