மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தந்த Bonus-ன் சில முக்கிய அம்சங்கள்!!
"2019-2020 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன்-இணைக்கப்பட்ட போனஸ் மற்றும் உற்பத்தித்திறன் இணைக்கப்படாத போனஸுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது. போனஸ் அறிவிப்பால் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட நான்-கெஸடட் ஊழியர்கள் பயனடைவார்கள். இதற்கான மொத்த நிதித் தேவை ரூ .3,737 கோடியாக இருக்கும்" என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று பிற்பகல் அறிவித்தார். Credits: PTI
விஜய தசமிக்கு முன்னால் முழு போனஸ் பணமும் ஒரே தவணையில் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். இந்த நடவடிக்கை செலவினங்களை ஊக்குவித்து பொருளாதாரத்தை உயர்த்தும் என்று அவர் கூறினார். Credits: PTI
ரயில்வே, தபால் துறை, EPFO, ESIC போன்ற வணிக நிறுவனங்களைச் சேர்ந்த 17 லட்சம் நான்-கெஸடட் ஊழியர்கள் அவர்களின் உற்பத்தித்திறனுடன் இணைக்கப்பட்ட போனஸைப் பெறுவார்கள். பிற 13 லட்சம் அரசு ஊழியர்கள் தங்கள் உற்பத்தித்திறன்-இணைக்கப்படாத போனஸைப் பெறுவார்கள். Credits: IANS
“2019-2020 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ், ரயில்வே, தபால் துறை, பாதுகாப்புத் துறை, EPFO, ESIC முதலான நிறுவனங்களின் சுமார் 16.97 நான்-கெஸடெட் பணியாளர்களுக்கு வழங்கப்படும். இதற்கான மொத்த நிதித் தேவை ரூ .2,791 கோடியாக இருக்கும். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.” என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. Credits: IANS
லாக்டௌன் தொடங்கியதிலிருந்து பொருளாதாரத்தில் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு நிவாரணமாக இருக்கும். கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அதாவது DA-வும் நிறுத்தப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் சில அரசாங்க ஊழியர்களுக்கு மாத சம்பளவும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த போனஸ் அறிவிப்பு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. Credits: Reuters
“Non-PLB அல்லது ad-hoc போனஸ் நான்-கெஸடட் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் 13.70 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். 946 கோடி ரூபாய் அதற்கான நிதி உட்குறிப்பாக இருக்கும்.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Credits: PTI