PHOTOS: அதிதி ராவ் ஹைடரியின் அட்டகாசமான புகைப்படங்கள் ஒரு பார்வை!!
அவர் இது குறித்து கூறியதாவது; ஒருநாள் இவை அனைத்தும் சரி ஆகும் என்று நம்புகிறேன். எந்தத் துறையிலும் தவறுகள் இல்லாமல் இல்லை. நாங்களும் மனிதர்கள்தான்.
எங்களிடமும் தவறுகளும் தோல்விகளும் உள்ளன. இதுபோன்ற விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். ஆனால், பாலிவுட்டுக்கும் ஒரு அழகான பக்கம் உண்டு.
இங்கே நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். நேர்மையாக இருக்கிறோம். யார் என்ன சொன்னாலும் இங்கே ஒருவருக்கு உதவி செய்கிறோம். சிலர் வெளியாட்கள், உள்ளே இருப்பவர்கள் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறேன்.
எனக்கு ஒரு பிரச்சினையென்றால் உதவி செய்யக் கூடிய ஏராளமானவர்கள் இங்கே இருக்கிறார்கள். நான் வெளியாள் என்று சொல்லப்பட்டாலும் எனக்கு அவர்கள் உதவுகின்றனர்.
குடும்பப் பின்னணி இல்லாதவர்களுக்குச் சில காலம் கடினமானதாக இருப்பது உண்மைதான்.
ஆனால், எந்தத் துறையில்தான் அப்படி இல்லை? ஏன் சினிமாவை மட்டும் தனியாகப் பிரிக்க வேண்டும்?" என அதிதி ராவ் கூறியுள்ளார்.