Budget 2021: விவசாயிகளுக்கு Good news காத்திருக்கிறது, வருமானம் அதிகரிக்கக்கூடும்!!
பிரதமர் கிசான் யோஜனாவின் (PMKSYN) கீழ் கொடுக்கப்படும் கிசான் சம்மான் நிதியின் அளவை ரூ .6000 லிருந்து ரூ .10,000 ஆக அரசு உயர்த்தக்கூடும் என்று கூறப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிக்கையும் இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையாக பார்க்கப்படுகிறது. அதில் அவர் இந்த முறை பட்ஜெட் வித்தியாசமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
PM Kisan திட்டத்தின் கீழ் தற்போது விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகின்றது. 2000 ரூபாய் தவணைகளில் மூன்று தவணைகளாக இது வழங்கப்படுகின்றது.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் போதுமானதாக இல்லை என்றும் அதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது என்றும் அரசாங்கத்திற்கு பின்னூட்டம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பட்ஜெட்டில் PM Kisan திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவு அதிகரிக்கக்கூடும். முன்னதாக இந்த தொகை 2019-20 நிதியாண்டில் 1.51 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது அடுத்த 2020-21 நிதியாண்டில் சுமார் 1.54 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பிரதமர் கிசான் யோஜனாவின் பயனாளிகளின் கூற்றுபடி அவர்கள் பெறும் தொகை மிகவும் குறைவானது. ஆண்டுக்கு ரூ .6000 அதாவது மாதத்திற்கு ரூ .500 அவர்களுக்குக் கிடைக்கிறது. இந்த தொகை விவசாயிகளின் கணக்குகளில் 2000 ரூபாய்க்கான மூன்று தவணைகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த தொகை மிகவும் குறைவானது என விவசாயிகள் கருதுகிறார்கள். ஒரு விவசாயி ஒரு பெரிய நிலத்தை வைத்திருந்தால், நெல் விளைச்சலுக்கு, சுமார் 3 முதல் 3.5 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அதே நேரத்தில், கோதுமை பயிரிட சுமார் இரண்டரை இரண்டரை ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த நிலையில், மாதம் 2000 ரூபாய்க்கான தொகை மிகக் குறைந்த உதவித் தொகையாக கருதப்படுகின்றது. இது அரசாங்கத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 பட்ஜெட்டில், விவசாயிகள் தொடர்பான பிற திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்படலாம் என வட்டாரங்காள் தெரிவிக்கின்றன. கிராம அபிவிருத்தி, பிரதமர் விவசாய நீர்ப்பாசன திட்டம், பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.