Budget 2021: நீங்கள் எந்த ‘Tax Slab’-க்குள் வருவீர்கள்? இங்கு தெரிந்துகொள்ளலாம்…

Wed, 20 Jan 2021-8:19 pm,

நேரடி வரியில், வருமான வரிக்கு கூடுதலாக, பரிசு வரி (Gift Tax), செல்வ வரி (Wealth Tax), மூலதன ஆதாய வரி (Capital Gain Tax) போன்றவை இருக்கின்றன. நீங்கள் பணம் ஈட்டினால், இந்த வரிகளை செலுத்த வேண்டும். நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி இந்த வரிகளின் வரிசையில் வரும். யாரெல்லாம் நிறுவனங்களில் பணிபுரிகிறார்களோ அவர்களெல்லாம் நேரடி வரி செலுத்த வேண்டும்.

 

வருமான வரி (Income Tax), மூலதன ஆதாய வரி (Capital Gains Tax), பத்திர பரிவர்த்தனை வரி (Securities Transaction Tax), நிறுவன வரி (Corporate Tax), பரிசு வரி (Gift Tax).

2018 ஆம் ஆண்டில், நேரடி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 4 கோடியிலிருந்து 6.75 கோடியாக இருந்தது. மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை முன்பு 70 லட்சமாக இருந்தது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட 1 ஆண்டில் இது 1.16 கோடியாகவும் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

 

அதிக அளவு பணம் ஈட்டுபவர்களிடமிருந்து அரசாங்கமும் அதிக வரி வசூலிக்கிறது. ஈக்விட்டி, மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியவற்றில் அதிக பணம் உள்ளவர்களும், செலவுக்கு பிறகும் அதிக தொகையை மிச்சப்படுத்த முடிந்தவர்களும்தான் முதலீடு செய்கின்றனர். இந்த சூழலில், அரசாங்கம் இந்த வழிகளில் வரும் வருமானத்திலும் வரி வசூலிக்கிறது. இந்த வரி மூலதன ஆதாய வரி என்று அழைக்கப்படுகிறது.

மூலதன ஆதாய வரி இரண்டு வகைப்படும். ஒன்று குறுகிய காலத்திற்கானது (STCG) மற்றொன்று நீண்ட காலத்திற்கானது (LTCG). இவற்றின் வரி விகிதங்களும் வேறுபடுகின்றன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link