தீபாவளிக்கு முன்னர் வரத் தொடங்கியது loan interest waiver cashback: உங்க account-ஐ செக் பண்ணுங்க!!

Thu, 05 Nov 2020-11:52 am,

ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களிடமும் ரூ. 2 கோடி வரையிலான கடன்களுக்கான 6 மாத கால தடைக்காலத்தில் வட்டி மீதான வட்டி தள்ளுபடி திட்டத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. நவம்பர் 5 க்குள் இது செயல்படுத்தப்பட வேண்டும். இந்தத் திட்டம் தொடர்பாக பொது மக்களின் மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்களை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அமைச்சகத்தின் கூற்றுப்படி, தங்கக் கடன் பெற்றிருப்பவர்களும் இந்த திட்டத்தின் கீழ் வட்டிக்கு வட்டி விலக்கு பெற தகுதியுடையவர்கள். கடன் வழங்கும் நிறுவனம் மூலம், MSME கடன் வாங்கியவர்களின் தனிப்பட்ட கடன்களுக்கும் இந்த தள்ளுபடி திட்டத்தின் கீழ் விலக்கு அளிக்க உரிமை உண்டு என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியது. இந்த கடன்களுக்கான உத்தரவாதம் எதுவாக இருந்தாலும், அது அவர்களின் தகுதியை பாதிக்காது.

பொதுவான கேள்விகளுக்கான இந்த இரண்டாவது தொகுப்பு நிதி அமைச்சகத்தால் சில நாட்களுக்குள்ளேயே வெளியிடப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்தும் கடைசி நாளுக்கு முன்னர் அமைச்சகம் விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, இந்த திட்டத்தை கடந்த மாதமே அரசாங்கம் அறிவித்தது. நிலையான கடன் கணக்குகளில், 6 மாத காலத்தில், கூட்டு வட்டி மற்றும் தனி வட்டி ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை திரும்பத் தருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வீட்டுக் கடன், கல்வி கடன், கிரெடிட் கார்டு நிலுவை, ஆட்டோ கடன், எம்.எஸ்.எம்.இ கடன், நுகர்வோர் கடன் ஆகியவை திட்டத்தின் வரம்பில் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், விவசாயத்திற்கான கடன்கள் மற்றும் அது தொடர்புடைய நடவடிக்கைகள் இந்த தள்ளுபடி திட்டத்திலிருந்து தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன.

திட்டத்தின் கீழ், 2020 மார்ச் 1 முதல் 2020 ஆகஸ்ட் 31 வரை வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பித் தருவதற்கான ஏற்பாடு உள்ளது. இந்த தொகை கடன் வாங்கியவர்களின் கணக்குகளுக்கு திருப்பித் தரப்படும்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நிதி அமைச்சகம் இது தொடர்பாக அக்டோபர் 23 அன்று வழிகாட்டுதல்களை வெளியிட்டது. நீதிமன்றம் அக்டோபர் 14 ஆம் தேதி, இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link