Space Hotel: உணவகங்கள், திரையரங்கம், ஸ்பா, சொகுசு அறைகளுடன் வருகிறது விண்வெளி ஓட்டல்
'விண்வெளி ஓட்டல்' பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் கட்டப்படும். அது வட்ட வடிவத்தில் இருக்கும். செயற்கை ஈர்ப்பை உருவாக்க வாயேஜர் நிலையம் சுழன்று கொண்டே இருக்கும். அவை சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் ஈர்ப்புக்கு ஒத்த மட்டத்தில் அமைக்கப்படும். வாயேஜர் ஸ்டேஷனின் ஹோட்டலில் ஒரு கப்பலில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பல அம்சங்கள் இருக்கும். இதில் கருப்பொருள் அடிப்படையிலான உணவகங்கள், ஹெல்த் ஸ்பா மற்றும் ஒரு திரையரங்கம் ஆகியவை இருக்கும்.
வாயேஜர் நிலையத்தில் தொடர்ச்சியான் பாட்கள் இருக்கும். இவை சுழலும் வளையத்தின் வெளிப்புறத்தில் இணைக்கப்பட்டிருக்கும். NASA மற்றும் ESA இந்த பாட்களில் சிலவற்றை விண்வெளி ஆராய்ச்சிக்காக வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'விண்வெளி ஹோட்டலில்' தொடர்ச்சியான வளையங்கள் இருக்கும். இதில் வெளிப்புறத்தில் உள்ள வளையத்துடன் பல மாட்யூல்கள் இணைக்கப்படும்.
வெர்ன்ஹெர் வான் ப்ரான் தான் இந்த பெருமையைப் பெறுகிறார். ஒரு மைய, வட்ட சக்கரத்தைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தை உருவாக்கும் யோசனை அவருக்கு வந்தது. நாசா அப்பல்லோ உருவாக்க கட்டடக் கலைஞர்களில் வான் ப்ரான் ஒருவராக இருந்தார்.
இந்த விண்வெளி ஓட்டலுக்கான யோசனை முதலில் 2012 ஆம் ஆண்டு உருவானது. கேட்வே அறக்கட்டளையின் துவக்கத்தோடு இந்த கருத்தும் உருவானது. (All pics courtesy voyagerstation.com)