உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த எளிமையான 5 வழிகள் இதோ!!
யோகாசனங்கள் ஒருவரது உடலுக்கு பல நன்மைகளை செய்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நீங்கள், பாலாசன், சேதுபந்தனாசன், தனுராசன், மற்றும் ஷலபாசன் ஆகியவற்றை செய்யலாம். இந்த யோகா ஆசனங்கள் உங்கள் தசைகளை தளர்த்தும். ரத்தம் உடல் முழுவதும் சீராக பரவி இருக்கும்.
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஆயுஷ் அமைச்சகம் Oil Pulling-ஐ பரிந்துரைத்துள்ளது. இது ஒரு ஆயுர்வேத முறையாகும். இதைச் செய்வதன் மூலம், வாயில் பாக்டீரியாக்கள் இல்லாமல் இருக்கும். இது காலையில் வெறும் வயிற்றில் செய்யப்படுகிறது. இதற்காக, தூய தேங்காய் எண்ணெயை / நல்லெண்ணெயை 4-6 நிமிடங்கள் வாயில் வைத்து கொப்பளிக்க வேண்டும். நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த Oil Pulling மிக நல்ல வழியாக இருக்கும்.
ஆரோக்கியமாக இருக்க, உடலில் தேவையான அளவு நீர் இருப்பது மிகவும் முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதற்கு, தினமும் காலையில் எழுந்த பிறகு, இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். எலுமிச்சை, தேன், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்தும் நீர் உட்கொள்ளலாம். வெற்று நீரைக் குடிப்பதை விட இது அதிக நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி செய்வதன் மூலம், நீங்கள் பல நோய்களிலிருந்து விலகி இருக்க முடியும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது. இதற்காக, நீங்கள் சாதாரண உடற்பயிற்சிகள், நடைபயிற்சி, ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றிலிருந்து தொடங்கலாம். நீங்கள் விரும்பினால் ஸ்கிப்பிங்கும் செய்யலாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, காலை சிற்றுண்டி மிக முக்கியமான உணவாகும். எனவே காலை உணவை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம். தினமும் காலையில் எடுத்துக்கொள்ளும் முதல் உணவில், புரதம், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்ஸ், மற்றும் ஃபைபர் ஆகியவை இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் காலை உணவில் பழங்கள், முழு தானியங்கள் மற்றும் காய்கறிகளையும் சேர்க்கவும்.
குறிப்பு: மேலே கூறப்பட்ட குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல்களுக்கானவை. எந்தவொரு மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரின் ஆலோசனையாகவும் அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம். நோய் அல்லது தொற்றுநோய்களின் அறிகுறி காணப்பட்டால், கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.