நமக்கு மிகவும் பரிச்சயமான Google-ல் நமக்குத் தெரியாத சில சுவாரசியமான விஷயங்கள் இதோ!!
முதலில் உங்கள் தொலைபேசி அல்லது லேப் டாப்பில் கூகிளைத் திறந்து பின்னர் barrel roll என எழுதி சர்ச் செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் திரை ஒரு முறை முற்றிலும் 360 டிகிரி சுழலும். நீங்கள் barrel roll-க்குப் பிறகு 2 என்று டைப் செய்து சர்ச் செய்தால் ஸ்க்ரீன் இரண்டு முறை சுழலும்.
நீங்கள் கூகிளில் tilt என டைப் செய்து சர்ச் செய்தவுடன் உங்களுக்கு பல சர்ச் ரிசல்டுகள் கிடைக்கும். இதில் வரும் முதல் லிங்கை நீங்கள் கிளிக் செய்ய வெண்டும். இணைப்பைக் கிளிக் செய்தவுடன், உங்கள் தொலைபேசியின் திரை சற்று வளைந்திருப்பதை நீங்கள் காண முடியும்.
கூகிளில் ஃபெஸ்டிவஸை சர்ச் செய்யும்போது, உங்கள் லேப்டாப் அல்லது தொலைபேசியின் திரையின் இடது பக்கத்தில் ஒரு நீண்ட அலுமினிய கம்பத்தை நீங்கள் காண முடியும். பொதுவாக இதை நீங்கள் கூகிளில் காண முடியாது.
கூகிளில் Zerg Rush என சர்ச் செய்தால், பல வண்ணங்களின் வளையங்கள் ஒரே நேரத்தில் திரையில் மேலே இருந்து கீழே விழும். படிப்படியாக உங்கள் திரையில் எழுதப்பட்டவை நீக்கப்படும். இதற்கு நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இது உங்கள் தொலைபேசியை எந்த வகையிலும் பாதிக்காது
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் கூகிள் எப்படி இருந்தது என்பதை நீங்கள் அறிய விரும்பினால், கூகிளில் இப்படி டைப் செய்து சர்ச் செய்யலாம். உதாரணமாக 1998-ல் கூகிள் எப்படி இருந்தது என்பதை தெரிந்துகொள்ள ‘Google in 1998’ என டைப் செய்ய வேண்டும்.