ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தன் நாட்டை மாற்றிக்கொள்ளும் தீவு: வாங்க போய் பார்க்கலாம்!!

Mon, 02 Nov 2020-5:13 pm,

உலகில் பல தீவுகள் உள்ளன, அவை பல வகைகளில் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன. அத்தகைய ஒரு தீவு பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் உள்ளது. இது எந்த நாட்டை சேர்ந்தது என்பதில்தான் இதன் சிறப்பம்சமே உள்ளது. இந்த தீவு ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் தனது நாட்டை மாற்றிக்கொண்டிருக்கின்றது. அதாவது, இந்த தீவு பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஆறு மாதங்களுக்கு இந்த தீவை ஆளுகின்றன. All Photos: Social Media

 

இந்த தீவின் பெயர் ஃபெசண்ட் தீவு (Pheasant Island). இது பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் ஃபெசென்ஸ் தீவு என்று அழைக்கப்படுகிறது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த தீவில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையே எந்த சண்டையும் இருப்பதில்லை. மாறாக இரு நாடுகளும் அதை மனம் ஒத்து பரிமாறிக்கொள்கின்றன. இந்த பாரம்பரியம் கடந்த 350 ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பதை அறிந்தால் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். All Photos: Social Media

இந்த தீவு பிப்ரவரி 1 முதல் ஜூலை 31 வரை ஸ்பெயினின் ஆட்சியில் இருக்கிறது. மீதமுள்ள ஆறு மாதங்கள் அதாவது ஆகஸ்ட் 1 முதல் ஜனவரி 31 வரை பிரான்சின் ஆட்சியில் இருக்கிறது. இந்த தீவு ஸ்பெயினையும் பிரான்சையும் பிரிக்கும் பிடாசோ ஆற்றின் நடுவில் உள்ளது. All Photos: Social Media

இது தற்போது ஒரு அமைதியான தீவாக உள்ளது. ஆனால் இதற்காக பிரான்சிற்கும் ஸ்பெயினுக்கும் இடையே பல சண்டைகள் நடந்துள்ள காலமும் உள்ளது. பின்னர், மூன்று மாத காலம் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1659 ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. இந்த நேரத்தில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது பைனீஸ் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. பகுதி பரிமாறிக்கொள்ளப்பட்டு எல்லைகள் முடிவு செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தம் ஒரு அரச திருமணத்துடன் முடிவடைந்தது. இதில் பிரான்சின் மன்னர் லூயிஸ் XIV ஸ்பெயினின் மன்னர் பிலிப் IV இன் மகளை மணந்தார்.

All Photos: Social Media

இந்த தீவு மிகவும் சிறியது. இது 200 மீட்டர் நீளமும் 40 மீட்டர் அகலமும் கொண்டது. பிபிசியின் கூற்றுப்படி, தீவை ஒட்டியுள்ள ஆற்றின் குறுக்கே ஒவ்வொரு 100 மீட்டருக்கும் சென்ட்ரிகள் அமைக்கப்பட்டன. இருப்பினும், வேகமாக நீர் பாய்ச்சல் மற்றும் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக இந்த தீவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் இப்போது அழிந்துவிட்டன. All Photos: Social Media

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link