Aloe Vera Alert: கட்டுக்கடங்காமல் போனால் கற்றாழையும் கடுப்பேத்தும்: உஷார் மக்களே….
Aloe Vera-வில் லேடெக்ஸ் காணப்படுகிறது. இதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. இது வயிற்று எரிச்சல், வயிற்று வலி போன்ற பல வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடலில் உள்ள பொட்டாசியம் அளவிலும் அதன் பயன்பாட்டால் ஏற்றத்தாழ்வுகள் எற்படலாம்.
ஏற்கனவே தோல் ஒவ்வாமை உள்ளவர்கள் Aloe Vera-ஐ பயன்படுத்தினால், சிலருக்கு, தோல் ஒவ்வாமை, சிவப்பு கண்கள், தோல் வெடிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படலாம்.
கற்றாழை சாற்றை அதிகமாக உட்கொள்பவர்கள் கவனமாக இருங்கள். கற்றாழை சாறு மலமிளக்கிய விளைவுகளைக் கொண்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி கற்றாழை சாற்றை கண்மூடித்தனமாக பயன்படுத்தக்கூடாது.
கர்ப்ப காலத்தில் இருக்கும்போதும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் கற்றாழை சாறு குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். கற்றாழை சாறு தோல் சுருங்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை உட்கொண்டால், அது பிரசவத்தின்போது பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
கற்றாழை சாறு உட்கொள்வது உடலில் பொட்டாசியம் அளவைக் குறைக்கும். இதைப் பயன்படுத்துவது ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தக்கூடும். இது மட்டுமல்லாமல், பலவீனம் மற்றும் சோர்வும் உடலில் ஏற்படலாம். எனவே ஏற்கனவே இதயத்தில் பிரச்சனைகள் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப கற்றாழை சாற்றை பயன்படுத்த வேண்டும்.