அசத்தும் Electric Car Kia EV6: 18 நிமிடங்களில் 80% சார்ஜ், 3.5 விநாடிகளில் 100 கி.மீ வேகம் !!

Sat, 08 May 2021-2:18 pm,

Kia EV6 பிரத்யேக தளத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மின்சார கார்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட E-GMP  இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதே தளம் தான் Hyundai IONIQ 5 இல் பயன்படுத்தப்படும்.

Kia EV6 இரண்டு மின்சார மோட்டார்கள் உதவியுடன் 577 ஹெச்பி பவரை உருவாக்குகிறது. இந்த எஸ்யூவி 0-லிருந்து 100 கிமீ வேகத்தை பிடிக்க வெறும் 3.5 வினாடிகளே ஆகும். EV6 இன் நீளம் 4,680 மிமீ, அகலம் 1,880 மிமீ மற்றும் உயரம் 1,550 மிமீ. இந்த காரின் வீல்பேஸ் 2,900 மி.மீ ஆகும்.

இந்த காரில், 800 வோல்ட் சார்ஜிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக 18 நிமிடங்களில் EV6 10% முதல் 80% சதவீதம் வரை ஆகி விடுகிறது. இந்த மின்சார எஸ்யூவியை வெறும் 4 நிமிடம் 30 வினாடிகள் சார்ஜ் செய்தால் போதும், நீங்கள் அதில் 100 கி.மீ தூரம் வரை ஓட்டுவதற்கான சார்ஜ் செய்துவிடலாம். 

கூற்றுப்படி, இந்த மின்சார எஸ்யூவியின் வரம்பு 510 கி.மீ. ஆகும். Kia EV6 577 HP அதிகபட்ச பவரை உருவாக்க முடியும். கூடவே இது சிங்கிள் சார்ஜில் 510 கி.மீ ரேஞ்சை அளிக்கிறது. 

நிறுவனம் இந்த மின்சார காரான கியா இவி 6 ஐ பிப்ரவரி 2021 இல் அறிமுகப்படுத்தியது. தகவல்களின்படி, நிறுவனம் இந்த காரின் உற்பத்தியை ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கக்கூடும். உற்பத்தி தொடங்கியதும், இந்த காரின் விநியோகமும் மீண்டும் தொடங்கப்படும். விற்பனை தொடங்கும் முன்பே Kia EV6 -க்கு ஐரோப்பாவில்  அதிகமான ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link