Wow… IndiGo website மூலமா ticket book செஞ்சா இத்தனை சலுகைகளா!!

Tue, 27 Oct 2020-5:27 pm,

நீங்கள் ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர் என்றால், இண்டிகோவின் வலைத்தளத்திலிருந்து டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட கட்டணத்தில் 25 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். கொரோனா தொற்றுநோய்களின் இந்த காலங்களில் விமானத்தில் ஒரு மருத்துவரோ செவிலியரோ இருந்தால், பயணிகளும் உதவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்களிடம் தற்போது பணம் இல்லையென்றாலோ அல்லது டிக்கெட்டுக்கு இப்போது முழு கட்டணம் செலுத்த விரும்பவில்லை என்றாலோ, டிக்கெட் பணத்தில் 10 சதவீதத்தை டெபாசிட் செய்து,  நீங்கள் உங்கள் இருக்கையை முன்பதிவு செய்துகொள்ளலாம். இண்டிகோ ஏர்லைன்ஸ் இந்த சலுகையை ஃப்ளெக்ஸி பே என்ற பெயரில் வழங்குகிறது.

ஃப்ளெக்ஸி பிளஸ் ஃபேர் திட்டத்தின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்தால், காம்ப்ளிமெண்டரி சீட், நோ சேஞ்ச் ஃபீஸ் மற்றும் டிக்கெட் கேன்சல் செய்தால் மிகக்குறைந்த கேன்சலேஷன் ஃபீஸ் என பல நன்மைகள் கிடைக்கின்றன.

 

உள்நாட்டு ஏர்லைன்ஸ் இண்டிகோ, நாக்பூர் மற்றும் சூரத்திலிருந்து நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கு இடைவிடாத விமானங்களை இயக்கி வருகிறது. இதற்காக பயணிகள் இப்போது முன்பதிவு செய்யலாம். இந்த வழித்தடங்களில் குறைந்தபட்ச கட்டணத்தையும் விமான நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளன. டிக்கெட் முன்பதிவு மற்றும் விமானத் தகவல்களுக்கு, நீங்கள் விமானத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.goindigo.in/ ஐப் பார்வையிடலாம்.

இண்டிகோ நாக்பூரிலிருந்து பல நகரங்களுக்கு இடைவிடாத விமானங்களை இயக்கும். நாக்பூரிலிருந்து இந்தூர், கொல்கத்தா, மும்பை, புனே, அகமதாபாத், டெல்லி, பெங்களூர், புவனேஸ்வர் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு நேரடி விமான சேவை கிடைக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link