SBI-ல் salary account open செய்து locker முதல் loan வரை அனைத்திலும் சலுகை பெறுங்கள்!!

Mon, 02 Nov 2020-12:36 pm,

சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வங்கியிடமிருந்து லாக்கர் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், வாடிக்கையாளர் சேமிப்புக் கணக்கில் அதிக வட்டிக்கு ஆட்டோ ஸ்வீப் செய்யும் வசதியையும் பெறலாம். சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் விரும்பினால் தங்கள் டிமேட் மற்றும் வர்த்தக கணக்கை தொகுத்துக்கொள்ளலாம்.

SBI சலுகையின் கீழ், நீங்கள் SBI-ல் உங்கள் சம்பளக் கணக்கைத் திறந்தால், உங்கள் கணக்கு முற்றிலும் பூஜ்ய இருப்பு கணக்காக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் குறைந்தபட்ச பேலன்சை வைத்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கணக்கிலிருந்து முழு பணத்தையும் எடுக்கலாம்.

SBI-ல் சேலரி அகௌண்ட் இருந்தால், ATM-மில் இருந்து வரம்பற்ற பரிவர்த்தனை வசதியை வங்கி உங்களுக்கு வழங்குகிறது. இதன் கீழ், நீங்கள் விரும்பும் போதெல்லாம் எந்த வங்கியின் ATM-ம்மில் இருந்தும் பணம் எடுக்கலாம். ATM-களில் இருந்து பணம் எடுப்பதற்கு வரம்பு இருக்காது மற்றும் பணத்தை எடுக்கும்போது நீங்கள் எந்தவிதமான கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.

வங்கியில் Salary account துவக்கும் வாடிக்கையாளருக்கு 20 லட்சம் தனிநபர் விபத்து காப்பீடு வழங்கப்படும். இதன் கீழ், வாடிக்கையாளர் விபத்தில் இறக்க நேரிட்டால், அவருக்கு 20 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

 

உங்கள் சம்பளத்தின்படி, உங்கள் கணக்கின் வகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, நீங்கள் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்து, உங்கள் சம்பளம் 10 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை இருந்தால், உங்கள் கணக்கு வெள்ளி பிரிவில் இருக்கும். உங்கள் சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் வரை இருந்தால், உங்கள் கணக்கு தங்கப் பிரிவில் இருக்கும். ஒரு லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களின் கணக்கு வைர பிரிவில் இருக்கும்.

அதே நேரத்தில், உங்களது சம்பளம் ஒரு லட்சத்துக்கும் மேலாக இருந்தால், உங்கள் கணக்கு பிளாட்டினம் பிரிவில் இருக்கும். கணக்கின் வகையின்படி, பல வகையான வசதிகள் வங்கியால் வழங்கப்படுகின்றன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link