U-Turn அடித்த WhatsApp: பயனர்களின் கோவத்திற்குப் பிறகு நிறுவனம் அளித்த முழு விளக்கம்

Tue, 12 Jan 2021-12:55 pm,

பயனர்களின் தனிப்பட்ட செய்திகளிலிருந்து Whatsapp தகவல்களை எடுக்காது என்று Whatsapp ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயனர்களின் தனிப்பட்ட அழைப்புகளின் தரவுகளும் எடுக்கப்படாது என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

எந்தவொரு பயனரின் அழைப்புகளையும் செய்திகளையும் பதிவுகளாக Whatsapp வைத்திருக்காது என்று செய்தியிடல் செயலி பயனர்களிடம் கூறியுள்ளது. அதாவது, அந்த தகவல்கள் கண்காணிக்கப்படாது.

 

புதிய தனியுரிமைக் கொள்கையில், ஒவ்வொரு பயனரின் இருப்பிடத்தின் தரவையும் பேஸ்புக் உடன் Whatsapp பகிர்ந்து கொள்ளும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது நிறுவனம் தனது அறிக்கையில் Whatsapp பயனர்களின் எந்த இடத்தின் தரவும் பேஸ்புக்கில் பகிரப்படாது என்று கூறியுள்ளது.

உங்கள் மொபைலில் உள்ள தொடர்பு பட்டியல் பேஸ்புக்கில் பகிரப்படாது என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. இது எப்போதும் தனிப்பட்ட தகவலாகத்தான் இருக்கும்.

 

Whatsapp-ல் இருக்கும் குழுக்களின் சேட்கள் மற்றும் தகவல்கள் தனிப்பட்ட தகவல்களாக இருக்கும் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. நிறுவனம் தனி நபர் குழுக்களின் தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாது.

மக்களின் எதிர்ப்பிற்குப் பிறகு, புதிய தனியுரிமைக் கொள்கை நேரடியாக Whatsapp வணிகக் கணக்குகளுடன் தொடர்புடையது என்பதை நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. வணிகக் கணக்குகளுக்கு சிறந்த சூழலைக் கொடுப்பதற்கும் அவற்றை பரப்புவதற்கும் மட்டுமே புதிய கொள்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. Whatsapp-ன் புதிய விதிகள் தனி நபர் கணக்குகளுடன் இணைக்கப்படக்கூடாது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link