First AC Railway Station in India: விரைவில் துவக்கம், ட்வீட் செய்தார் ரயில்வே அமைச்சர்
)
நாட்டின் முதல் மையப்படுத்தப்பட்ட ஏர் கண்டிஷனிங் ரயில் நிலையத்திற்கு சர் எம். விஸ்வேஸ்வரயா டெர்மினல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையம் கிட்டத்தட்ட தயாராக உள்ளது. இதன் செயலாக்கம் மிக விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
)
நாட்டின் முதல் ஏசி ரயில் முனையம் பயப்பனஹள்ளி பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையம் தொடங்கப்பட்ட பின்னர், கே.எஸ்.ஆர் பெங்களூரு மற்றும் யஷ்வந்த்பூர் நிலையங்களில் மக்கள் கூட்டம் குறைந்துவிடும்.
)
சர் எம். விஸ்வேஸ்வரயா ரயில் நிலையத்தை உருவாக்குவதற்கு சுமார் 314 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இது பிப்ரவரி 2021 க்குள் தொடங்கப்பட இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக, பணிகள் தாமதமாக முடிக்கப்பட்டன. ஆனால் இப்போது இந்த ஏசி நிலையம் முழுமையாக கட்டப்பட்டு தயாராகி விட்டது.
நாட்டின் முதல் ஏசி ரயில் நிலையம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பெங்களூரு வரை அதிக எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க முடியும். இதன் நன்மை என்னவென்றால், கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்கள் தலைநகர் பெங்களூருடன் ரயில் பாதை வழியாக இணைக்கப்படும்.
நாட்டின் முதல் ஏசி ரயில் நிலையம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. ஏசி நிலையம் விமான நிலையத்தைப் போலவே காணப்படுகிறது. இந்த ஏசி நிலையத்தை ரயில்வே தயாரித்த விதத்தில், புதிய இந்தியாவின் அம்சம் பிரதிபலிக்கிறது.