LPG Cylinder-ல் 700 ரூபாய் தள்ளுபடி: இந்த வகையில் புக் செய்து பயன் பெறுங்கள்
)
நீங்களும் இதைப் பயன்படுத்த விரும்பினால், உங்களிடம் Paytm செயலி இருக்க வேண்டும். நீங்கள் Paytm செயலி மூலம் முதன்முறையாக எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்து, செயலியின் மூலம் பணம் செலுத்தும்போது, இந்த சலுகையின் கீழ் 700 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். நீங்கள் பணம் செலுத்தும்போது, உங்களுக்கு ஒரு ஸ்க்ரேட்ச் கார்ட் கிடைக்கும். அதை கீறி நீங்கள் உங்களுக்கான சலுகையைக் காண முடியும். நீங்கள் ஸ்க்ரேட்ச் கார்டை பயன்படுத்தவில்லை என்றால், அதை நீங்கள் பின்னர் Paytm செயலியில், கேஷ்பேக் மற்றும் ஆஃபர்ஸ் பிரிவுக்குச் சென்று காண முடியும். பின்னர் இதை கீறி பயன்படுத்திக் கொள்ளலாம்.
)
சிலிண்டர் முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள், கேஷ்பேக்கிற்கான ஸ்க்ரேட்ச் கார்ட் கிடைக்கும். இதை 7 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். நீங்கள் ஸ்க்ரேட்ச் கார்டை பயன்படுத்த மறந்துவிட்டால், அதை நீங்கள் பின்னர் Paytm செயலியில், கேஷ்பேக் மற்றும் ஆஃபர்ஸ் பிரிவுக்குச் சென்று பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை 31 மார்ச் 2021 வரை மட்டுமே உள்ளது. அதாவது இன்னும் 4 நாட்களுக்கு மட்டுமே உள்ளது.
)
நீங்கள் இந்த சலுகையை பயன்படுத்த விரும்பினால், முதலில் உங்கள் தொலைபேசியில் Paytm செயலியை திறந்து அதில், 'Recharge and Pay Bills' செக்ஷனைத் திறக்கவும்.
'Book a Cylinder' ஆப்ஷன் இருப்பதைக் காண்பீர்கள். உங்கள் எல்பிஜி சேவை வழங்குநரைத் தேர்வுசெய்யவும். இது, பாரத் கேஸ், ஹெச்.பி கேஸ் அல்லது இண்டேனாக இருக்கும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண் அல்லது LPG ID-ஐ உள்ளிடவும்.
இதற்குப் பிறகு, பேமெண்ட் செய்வதற்கான ஆப்ஷன் உங்களுக்கு அளிக்கப்படும். பேமண்ட் செய்வதற்கு முன்னர் ‘Offer'-ல் சென்று ‘FIRSTLPG' ப்ரொமோ கோடை உள்ளிட்டு அதன் பிறகு பேமெண்ட் செய்யவும்.