வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு good news: வீட்டு வாடகையில் Rs.1000 வரை Cashback கிடைக்கும்!!

Tue, 09 Feb 2021-6:08 pm,

இப்போது, ​​வாடகையில் இருக்கும் நபர்கள் மாதாந்திர வாடகையை உடனடியாக தங்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் தங்கள் வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம். இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு ரூ .1000 வரை கேஷ்பேக் செய்வதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் கேஷ்பேக் சம்பாதிப்பதைத் தவிர, பயனர்கள் கிரெடிட் கார்டு புள்ளிகளையும் இதனால் சேகரிக்க முடியும்.

- வீட்டு உரிமையானருக்கு வாடகைப் பணம் செலுத்தும்போது, வாடகையில் இருக்கும் நபர், Paytm முகப்புத் திரையில் உள்ள “Recharge & Pay Bills” பிரிவில் இருந்து "Rent Payment”- ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

- பயனர்கள் கிரெடிட் கார்டிலிருந்து நேரடியாக வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை பரிமாற்றலாம்.

- UPI, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற பிற கட்டண முறைகள் மூலம் வாடகை செலுத்தும் நெகிழ்வுத்தன்மையையும் தருவதாக Paytm கூறுகிறது.

- வாடகை செலுத்துபவர், வீட்டு உரிமையாளரின் வங்கி கணக்கு விவரங்களை மட்டுமே உள்ளிட்டால் போதும், வேறு எதுவும் உள்ளிட தேவை இல்லை.

- டாஷ்போர்டு அனைத்து வாடகை கட்டணங்களையும் கண்காணிக்க உதவுகிறது. கட்டணம் செலுத்த வேண்டிய தேதிகளையும் இது நினைவூட்டுகிறது. மேலும், வீட்டு உரிமையாளர்களுக்கு உடனடி கட்டண உறுதிப்படுத்தலையும் இது அனுப்புகிறது.

இது குறித்து Paytm இன் துணைத் தலைவர் நரேந்திர யாதவ் கூறுகையில், "வீட்டு வாடகை என்பது நம் நாட்டில் வாடகை வீடுகளில் இருப்பவர்களின் அதிகபட்ச தொடர் செலவாகும்.  இந்த இக்கட்டான சூழலில், அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குள், எங்கள் வாடகை செலுத்தும் அம்சம் ஏற்கனவே மில்லியன் கணக்கான பயனர்களுக்கு பணப்புழக்கத்தை பராமரிக்க உதவி வருகிறது. மேலும், அவர்களின் கிரெடிட் கார்டு சுழற்சியின் படி வாடகையை அவர்கள் செலுத்துகின்றனர். இந்த சேவையின் விரிவாக்கத்துடன், வாடகைக் கொடுப்பனவுகளில் Paytm அதன் சந்தைத் தலைமையை தொடரும்.” என்றார்.

Paytm இன் துணைத் தலைவர் நரேந்திர யாதவ் மேலும் கூறுகையில், "நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு பயன்பாட்டு பில்கள், கிரெடிட் கார்டு பில்கள் போன்ற தொடர் கட்டணங்களை செலுத்துவதில் அதிகப்படியான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். விரைவில், கல்வி கட்டணம், வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கு பணம் செலுத்தவும், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் செயல்முறை செயலாக்கப்படும்.” என்று கூறினார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link