உங்கள் வீட்டிற்குள் நீங்கள் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருக்க சில health tips!!

Wed, 30 Dec 2020-7:30 pm,

வீட்டில் சரியான காற்றோட்டம் இருக்க வேண்டும். காற்றோட்டம் சரியாக இல்லாவிட்டால், காற்றின் இயக்கம் சரியாக இருப்பதில்லை. குறுகிய மற்றும் தடைபட்ட காற்றோட்டம் இருக்கும் வீட்டில் காற்றின் சுழற்சி இருக்காது. தடைபட்ட காற்றோட்டம் காரணமாக, மாசுபட்ட காற்றில் 60 சதவீதம் வீட்டிலேயே தங்கிவிடுகிறது என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. வீட்டிலுள்ள காற்றை சுத்தம் செய்ய காற்று சுத்திகரிப்பு கருவிகளைப் பயன்படுத்துவது நல்லது.

 

ஒரு ஆராய்ச்சியின் படி, வீட்டில் காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கு புகைபிடிப்பதே முக்கிய காரணம். கூடுதலாக, வீட்டில் மெழுகுவர்த்திகள் அல்லது ரசாயன பொருட்களை எரிப்பதால் காற்று மாசுபடும் அபாயம் அதிகரிக்கிறது.

சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதில் மரங்களும் தாவரங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை காற்றை சுத்திகரிக்கின்றன. ஆகையால் வீட்டில் செடிகளை வளர்ப்பது மிக நல்லது. செடிகள் தாவர விஷம் மற்றும் அசுத்தங்களை அழிக்கின்றன. மேலும், மாசுபட்ட காற்றினால் ஏற்படும் கண் எரிச்சலையும் இவை போக்குகின்றன. கூடுதலாக, இது மன அழுத்தத்தையும் குறைக்கிறது. சுவாச நோய்களின் அபாயமும் குறைகிறது.

கார்பெட்டுகள் தூசி மற்றும் துகள்களின் இருப்பிடமாக விளங்குகின்றன. கம்பளத்திலிருந்து வரும் தூசி ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் கபம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதற்காக, குளிர்காலத்தில் கம்பளத்தைப் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்வது நல்லது.

சமையலறை மற்றும் குளியல் அறையில், ஈரப்பதமான காற்று காரணமாக பூஞ்சை ஆபத்து அதிகரிக்கிறது. பூஞ்சை மாசின் சிறிய துகள்களை உள்வாங்கி அவற்றை உடலுக்குள் கொண்டு செல்கிறது. இதனால் சளி, இருமல் மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். பூஞ்சையை தவிர்க்க வீட்டின் சமையலறை மற்றும் குளியலறையில் exhaust fan-களை பயன்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல்களுக்கானவை. எந்தவொரு மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரின் ஆலோசனையாகவும் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம். நோய் அல்லது நோய்த்தொற்றின் அறிகுறிகள் தென்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link