உங்கள் smartphone water resistant-டா அல்லது water repellent-டா? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Mon, 07 Dec 2020-8:26 pm,

நீங்கள் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கும்போது, அதில் water proof தொடர்பான அம்சங்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விஷயங்களைப் பற்றி பார்க்கலாம். Photo Credits: Social Media

 

உங்கள் மொபைல் நீர் எதிர்ப்புடன் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு தொலைபேசியின் உள்ளே தண்ணீர் போவது மிகவும் கடினம் என்று பொருள். இந்த நுட்பம் பல கைக்கடிகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதில் நீரின் சில துளிகள் பட்டாலும், கைக்கடிகாரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதேபோல், நீர் எதிர்ப்பு வசதியுள்ள ஸ்மார்ட்போன்களில் நீர் சொட்டுகளால் எந்தத் தீங்கும் ஏற்படாது. ஆனால் அதற்காக உங்கள் தொலைபேசியை நீங்கள் வேண்டுமென்றே தண்ணீரில் போடலாம் என்று இதற்கு பொருள் அல்ல. வாட்டர் ரெசிஸ்டெண்டை வாட்டர் ப்ரூஃப் என புரிந்துகொள்ளக் கூடாது. மிகச் சில எலக்ட்ரானிக்ஸ் கருவிகளே உண்மையிலேயே நீர்ப்புகா தன்மை கொண்டிருக்கும். Photo Credits: Social Media

 

வாட்டர் ரெசிஸ்டண்ட் தொலைபேசிகள் மற்றும் சாதனங்களுக்கு IP மதிப்பீடுகளைப் பயன்படுத்துகின்றன. நீர் எதிர்ப்பின் அடிப்படையில் மதிப்பீடுகள் ஒன்று முதல் ஒன்பது வரை இருக்கும். இவற்றில் ஒன்பது என்ற ரேட்டிங்க் உள்ளவை சிறந்தவை என்று கருதப்படுகிறது. நீர் எதிர்ப்பு மதிப்பீடுகள் சில நிபந்தனைகளில் மட்டுமே பொருந்தும். Photo Credits: Social Media

உங்கள் தொலைபேசியில் வாட்டர் ரிபெல்லண்ட் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருந்தால், உங்கள் தொலைபேசியிலோ அல்லது சாதனத்திலோ ஒரு மெல்லிய ஃபிலிம் பொருத்தப்பட்டிருக்கும். இது தொலைபேசியில் தண்ணீரை செல்ல விடாது. இந்த ஃபிலிம் சாதனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பயன்படுத்தப்படுகிறது. சாதனத்தில் நீர் பாதிப்பு இல்லாமல், சாதனத்தை தண்ணீரிலிருந்து பாதுகாக்க பெரும்பாலான நிறுவனங்கள் தொலைபேசியில் ஒரு ஹைட்ரோபோபிக் மேற்பரப்பை உருவாக்குகின்றன. இந்த தொழில்நுட்பத்துடன் கூடிய சாதனம் ஒரு சாதாரண சாதனத்தை விட அதிக நேரம் நீரில் நீடிக்கும். Photo Credits: Social Media

பல ஸ்மார்ட்போன்கள் நீர்ப்புகா சான்றிதழுடன் வருகின்றன. அதாவது தொலைபேசி தண்ணீரிலும் பாதுகாப்பாக இருக்கும் என்று இதற்கு பொருள். இது மட்டுமல்லாமல், இந்த தொலைபேசிகளை நீருக்கடியில் புகைப்படம் எடுக்கவும் பயன்படுத்தலாம். எனவே தொலைபேசியில் water proof, water resistant அல்லது water repellent என இதில் எந்த வசதி உள்ளது என்பதை கவனமாக சரிபார்க்கவும். Photo Credits: Social Media

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link