Aadhaar News: உங்கள் குழந்தையின் ஆதாரில் இந்த புதுப்பிப்பை செய்ய மறக்காதீர்கள், விவரம் உள்ளே
UIDAI-ன் படி, பெற்றோர்கள் ஆதார் சேவை மையங்களில் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் அல்லது மருத்துவமனையால் வழங்கப்பட்ட டிஸ்சார்ஜ் கார்டை காட்டி, அதன் மூலம் குழந்தையின் ஆதார் அட்டையைப் பெற முடியும்.
UIDAI இன் படி, உங்கள் குழந்தைக்கு 5 வயதாகும் போது, அவரது பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பது கட்டாயமாகும். அதேபோல், குழந்தைக்கு 15 வயதாகும்போதும், பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
5 வயதிற்கு முன்னர் ஆதார் அட்டை செய்யப்படும் குழந்தைகளின் பயோமெட்ரிக்ஸ், அதாவது கைரேகைகள் மற்றும் கண்களில் போதுமான வளர்ச்சி இருப்பதில்லை. ஆகையால், அத்தகைய சிறு குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறப்படும்போது அவர்களின் பயோமெட்ரிக் விவரங்கள் எடுக்கப்படுவதில்லை. எனவே, UIDAI-ஐ 5 வயதில் புதுப்பிக்க வேண்டியது அவசியம். இதேபோல், ஒரு குழந்தை இளமை பருவத்தில் நுழையும் போது, அவரது பயோமெட்ரிக் அளவுருக்களில் மாற்றங்கள் ஏற்படும். எனவே, யுஐடிஏஐ மீண்டும் 15 வயதில் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
UIDAI இன் படி, குழந்தைகளின் ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பது முற்றிலும் இலவசமாகும். நீங்கள் ஒரு ரூபாய் கூட இதற்கு செலவிட வேண்டியதில்லை. மேலும், நீங்கள் விவரம் புதுப்பிப்புக்கச் செல்லும் போதெல்லாம், எந்த வகையான ஆவணத்தையும் கொடுக்க வேண்டியதில்லை. பெற்றோர்கள் தங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று குழந்தையின் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்கலாம். உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்தின் தகவல்களை UIDAI வலைத்தளத்திலிருந்து பெறலாம்.