முக்கிய செய்தி, Crash ஆனது Income Tax Website: இந்த வழியில் offline-ல் பான் ஆதார் link செய்யலாம்
ஆதார் அட்டை மற்றும் பான் கார்டை ஆஃப்லைனிலும் இணைக்க முடியும். உங்களிடம் ஆன்லைன் வசதி இல்லையென்றாலும், நீங்கள் எஸ்எம்எஸ் வழியாகவும் இந்த பணியை செய்து விடலாம்.
இதற்காக, உங்கள் மெசேஜ் பாக்சில், UIDPN என்று டைப் செய்து ஸ்பேசிற்கு பிறகு PAN மற்றும் Aadhaar எண்ணை உள்ளிடவும். இந்த தகவல்களை 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பவும். இதன் பின்னர் உங்கள் பான் ஆதார் உடன் இணைக்கும் பணியைத் துறை தொடங்கும்.
மார்ச் 31 க்குள் பான் கார்டை ஆதார் உடன் இணைக்காதவர்களும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், அவர்களின் பான் அட்டை மார்ச் 31 க்குப் பிறகு செயல்படாது. இணைக்கப்படாத பான் அட்டையை வைத்திருப்பவர்கள் பான் அல்லாதவர்களாக (Non-Pan Holders) கருதப்படுவதோடு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 272 பி இன் கீழ் அவரளுக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம் என்று வருமான வரித் துறை கூறியுள்ளது.
ஒரு நபர் தனது பானை கடைசி தேதிக்குள் ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், அவரது பான் அட்டை செயலில் இருக்காது. அதாவது, அவரது பான் கார்டை நிதி பரிவர்த்தனைகளில் பயன்படுத்த முடியாது. பான் கார்டு தேவைப்படும் இடங்களில், அதை பயன்படுத்த முடியாது. இதன் நேரடி தாக்கம் அனைத்து வகையான வங்கி பரிவர்த்தனைகள், டிமேட் கணக்குகள், புதிய வங்கி கணக்குகள் ஆகியவற்றில் இருக்கும்.
பான் கார்டை ஆதார் உடன் இணைப்பதற்கான தேதி மீண்டும் நீட்டிக்கப்படும் என்ற நம்பிக்கை இப்போது இல்லை என்று வரி நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும். ஆகையால் மார்ச் 31-க்குள் அனைவரும் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டியது கட்டாயமாகும்.