India’s Lifeline Express: இலவசமாக மருத்துவம் செய்யும் உலகின் முதல் ரயில் மருத்துவமனை

Mon, 04 Jan 2021-12:19 pm,

ரயில்வேயின் லைஃப்லைன் எக்ஸ்பிரசை இயக்குவதன் முக்கிய நோக்கம் தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளில் மருத்துவ வசதிகளை வழங்குவதாகும். உலகில் எந்த நாட்டிலும் இதுபோன்ற ரயில் இல்லை. இந்த ரயிலில் மருத்துவமனை போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன.

தகவல்களின்படி, லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் ரயில் அசாமில் உள்ள பதர்பூர் நிலையத்தில் தற்போது உள்ளது. இந்த மருத்துவமனை ரயிலில் அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் மருத்துவர்கள் குழு உள்ளன. இதில் 2 நவீன ஆபரேஷன் தியேட்டர்கள் மற்றும் 5 ஆபரேஷன் டேபிள்கள் உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன.

இந்த லைஃப்லைன் எக்ஸ்பிரஸில் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் முறை உள்ளது. ரயில்வே பகிர்ந்த புகைப்படங்களிலிருந்து, இந்த ரயிலில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளன என்று ஊகிக்க முடிகிறது.

இந்த ரயிலில் 2 நவீன ஆபரேஷன் தியேட்டர்கள், 5 ஆபரேஷன் டேபிள்கள் உள்ளன. இது தவிர, ரயிலில் மருத்துவ பணியாளர்களுக்கான அறைகளும் மற்ற மருத்துவ வசதிகளும் உள்ளன. லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் ரயில் அசாமில் உள்ள பதர்பூர் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இம்பாக்ட் இந்தியா அறக்கட்டளை இந்திய ரயில்வேயுடன் இணைந்து இந்த ரயிலை இயக்குகிறது. இது 7 பெட்டிகள் கொண்ட ரயிலாகும். இந்த குறிப்பிட்ட ரயில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை கடந்து செல்கிறது. இதற்குப் பிறகு, அதன் அட்டவணைப்படி அது வெவ்வேறு நிலையங்களில் நிற்கிறது. மருத்துவ தேவை இருக்கும் அங்குள்ள மக்கள் தங்கள் சிகிச்சையைப் பெறுகிறார்கள். இந்த ரயிலில் அறுவை சிகிச்சைகள், அடிப்படை சிகிச்சைகள் போன்றவையும் செய்யப்படுகின்றன.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link