Christmas Special: Indigo வழங்கும் இந்த yummy offer பற்றி உங்களுக்குத் தெரியுமா? Booking started!!
விமான நிறுவனம் வழங்கிய இந்த சலுகையின் கீழ், விமானத்தின் போது உங்களுக்கு பல வகையான கேக்குகள் வழங்கப்படும். இந்த சுவையான கேக்குகளை உண்டு மகிழ, நீங்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்தால், உங்கள் இருக்கையில் சூடான மற்றும் ஃப்ரெஷ்ஷான கேக் வழங்கப்படும்.
நிறுவனம் தற்போது தனது இந்த சலுகையின் கீழ் மூன்று வகையான கேக்குகளை வழங்கி வருகிறது. இதில் சைவ மற்றும் அசை வகை கேக்குக்ள் உள்ளன. விமான நிறுவனம் Vegetable Pie with Plum Cake, Chicken Pie with Plum Cake மற்றும் Plum Cake ஆகியவற்றை வழங்குகிறது. முன்பதிவில் 15 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். டிசம்பர் 5 முதல் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கேக் 450 ரூபாய்க்கு கிடைக்கும். இதில் vegetable pie மற்றும் Chritmas special Plum Cake இருக்கும். இந்த கேக்கின் விலை 200 ரூபாயாகும். இந்த பிளம் கேக்கில் பருவகால பழங்கள் மற்றும் பெர்ரிகள் இருக்கும்.
இந்த கேக்கின் விலை ரூ .450 ஆக வைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு வகையான பிளம் கேக்தான். ஆனால் கோழி மற்றும் நிறைய மசாலாப் பொருட்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
டிக்கெட் முன்பதிவு செய்யும் போது நீங்கள் சிற்றுண்டிகளை முன்பதிவு செய்தால், விமானத்தின் போது உங்களுக்கு இந்த கேக் வகைகளுக்கான வசதி கிடைக்கும். 6E Tiffin Service-ன் கீழ் விமான நிறுவனங்கள் வழங்கும் தின்பண்டங்கள் ரூ .150 முதல் தொடங்குகின்றன. தின்பண்டங்களில், நீங்கள் உப்பு போட்டு வறுத்த முந்திரி, சாக்லேட் சிப்ஸ் பிஸ்கட் மற்றும் பல வகையான சைவ மற்றும் அசைவ சான்விட்ச் ஆகியவற்றை முன்பதிவு செய்யலாம். தின்பண்டங்களை முன்பதிவு செய்யும்போது, தின்பண்டங்களின் விலையில் 15% சேமிக்கவும் முடியும்.