Maruti Suzuki கார்களில் பம்பர் சலுகை: மிகக் குறைந்த விலையில் கார்களை வாங்கலாம்
மாருதி தனது பல மாடல்களில் இந்த தள்ளுபடியை வழங்குகிறது. மாருதியின் மலிவான காரான மாருதி சுசுகி ஆல்டோவில் 15 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது. உங்கள் பழைய காருக்குப் பதிலாக நீங்கள் அதை வாங்கினால், உங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். மாடலைப் பொறுத்து, வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பரிமாற்ற போனஸைப் பெறலாம். இது தவிர, நீங்கள் 5 ஆயிரம் ரூபாய் கார்ப்பரேட் தள்ளுபடியையும் பெறலாம். மாருதி ஆல்டோ 800 காரில் 796 சிசி பெட்ரோல் எஞ்சின் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட எஞ்சின் மற்றும் அம்சங்களுடன் ஆல்டோ அறிமுகப்படுத்தப்பட்டது.
மாருதி தனது Micro SUV S-Presso-விலும் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ வாங்கும்போது 12 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியைப் பெறலாம். ஆனால் எஸ்-பிரஸ்ஸோ சிஎன்ஜி மாடலில் எந்த தள்ளுபடியும் வழங்கப்படவில்லை. எஸ்-பிரஸ்ஸோவில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 68 ஹெச்பி பவரை அளிக்கிறது. எஸ்-பிரீசோ லிட்டருக்கு 21.7 கி.மீ. மைலேஜை அளிக்கிறது.
Maruti Suzuki Wagon-R -ல் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. இருப்பினும், அதன் சி.என்.ஜி மாடலில் தள்ளுபடி இல்லை. Wagon-R -ல் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் என்ற இரண்டு இரண்டு பெட்ரோல் என்ஜின்களுக்கான தெர்வு கிடைக்கிறது. 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 68 ஹெச்பி பவரையும், 1.2 லிட்டர் எஞ்சின் 83 ஹெச்பி பவரையும் தருகிறது.
சில விநியோகஸ்தர்கள் Celerio X-ல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான ரொக்க தள்ளுபடியையும், Celerio-வில் 15 ஆயிரம் ரூபாய் வரையிலான தள்ளுபடியையும் வழங்குகிறார்கள். இருப்பினும் 15 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பரிமாற்ற போனஸாக மட்டுமே கிடைக்கிறது. இந்த காரில் 1.0 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது மேனுவல் மற்றும் ஏ.எம்.டி கியர்பாக்ஸுடன் வருகிறது.
மாருதி நிறுவனத்தின் மிகச்சிறந்த விற்பனையாகும் காரான Maruti Suzuki Swift -ன் Lxi மற்றும் Lxi (O) வகைகளில் ரூ .30 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. சில விநியோகஸ்தர்கள் இந்த காரின் முன்-ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 5 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடியை வழங்குகிறார்கள்.
மாருதி டிசைரின் சிறந்த டிரிம்களில் எந்த தள்ளுபடியும் இல்லை. ஆனால் காரின் அடிப்படை வகைககளுக்கு 5000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. டிசையர் நிறுவனத்தின் மிகச்சிறந்த எரிபொருள் திறன் கொண்ட கார் ஆகும். இதில் 1.2 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 90 ஹெச்பி ஆற்றலை வழங்குகிறது.
இது அதன் பிரிவில் அதிகம் விற்பனையாகும் சப்-காம்பாக்ட் எஸ்யூவி ஆகும். நிறுவனம் தனது பிரபலமான எஸ்யூவி விட்டாரா ப்ரெஸாவின் சிறந்த வகைகளில் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியை வழங்குகிறது.