உங்களுக்கு NPS-ல் account இருந்தால் கண்டிப்பாக இதைச் செய்யவும்: இல்லையென்றால் பிரச்சனை
)
பதிவு செய்யும் நேரத்தில் இந்த இரண்டு விவரங்களையும் நீங்கள் கொடுக்கவில்லை என்றால், அவற்றை இப்போது கண்டிப்பாக அகௌண்டில் அப்டேட் செய்து அகௌண்டை புதுப்பிக்க வேண்டும். வேறு ஏதேனும் மாற்றம் இருந்தால், அதைப் புதுப்பிப்பதும் அவசியம். அவ்வாறு செய்யத் தவறினால், சென்ட்ரல் ரெக்கார்ட் கீப்பிங் ஏஜென்சிகளிடம் (CRA கள்) உள்ள உங்கள் ஆவணங்கள் புதுப்பிக்கப்படாமல் இருந்துவிடும்.
)
PFRDA தனது சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் நகல் ஜீ பிசினஸிடம் உள்ளது. புதிய கணக்குகள் OTP மூலம் மட்டுமே திறக்கப்படும் என்றும் பழைய கணக்குகளின் சரிபார்ப்பு OTP மூலம் செய்யப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. NPS-ல் முதலீடு செய்தால் பிரிவு 80CCD-யின் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.
)
புதிய நபர்கள் அகௌண்டைத் திறக்க Kyc-க்கான (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) எந்த ஆவணங்களையும் வழங்க வேண்டியதில்லை. ஆஃப்லைன் ஆதாரைக் கொண்டு அகௌண்டை திறந்து விடலாம். அதன் நகலும் வழங்கத் தேவையில்லை. சாத்தியமான பங்குதாரர்களின் சம்மதத்துடன் ஆஃப்லைன் ஆதார் மூலம் என்.பி.எஸ் கணக்கைத் திறக்க பி.எஃப்.டி.ஏ ஏற்கனவே ஈ-என்.பி.எஸ் / பாயிண்ட் ஆஃப் ப்ரெசன்ஸ் மையங்களை அனுமதித்துள்ளது.
PFRDA-வின் படி, NPS கணக்குகளில் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் ஒரே மாதிரியாக இல்லையா என்பதை சி.ஆர்.ஏக்கள் சரிபார்க்க வேண்டும் என்பதே நோக்கம்.
eNPS-ன் இணையதளத்தில் முதலில் உள்நுழையவும். National Pension Scheme-ஐ கிளிக் செய்யவும். பதிவு பொத்தானை அழுத்தவும். OTP Authentication / eSign ஐக் கிளிக் செய்யவும். Acknowledgement No., Acknowledgement Date, Date of Birth, First Name, Date of Birth மற்றும் Email Address ஆகிய தகவல்களை அளிக்கவும். அதன் பிறகு OTP பொத்தான் வரும். Generate OTP பொத்தானைக் கிளிக் செய்யவும். மொபைல் மற்றும் மின்னஞ்சலில் இரண்டு தனித்தனி OTP கள் வரும். இந்த இரண்டையும் பூர்த்தி செய்த பிறகு, செயல்முறை முடிவடையும்.