Mountains: மலைகளும், அவற்றின் பல்வேறு தோற்றங்களும்...

Thu, 30 Jul 2020-12:33 pm,

கைலாயத்தின் கிரிவலப்பாதை... கிறித்துவர்களுக்கு ஜெருசலேம்.. இஸ்லாமியர்களுக்கு மெக்கா மதீனா என்றால் கைலாயமே இந்துக்களின் முழு முதல் புனிதத்தலம்... மலை... மலைகள் தோறும் வீற்றிருப்பது சிவகுமாரன் என்றால், மிகப்பெரிய மலையை வாசஸ்தலமாக கொண்டவர் சிவபெருமான்... பெருமான் என்பதால் தான் பெரிய மலையில் அமர்ந்திருக்கிறாரோ?

இமயமலையின் உச்சியிலே மகுடம் சூடி அமர்ந்திருக்கும் எவரெஸ்ட்...

மலையேறிகள் மட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகள் பலரும் மலைக் காதலர்களாக இருப்பதால் தான், காதலனைப் பார்க்க இப்படி கவர்ச்சியாக செல்கின்றனரோ?

இந்துக்களின் புனித மலை கைலாய மலை.. முக்கண் முதல்வனின் இருப்பிடம்...

அளவுகளில் மட்டுமல்ல, நிறங்களும் மலைக்கு மலை மாறுபடும்... மலைகளின் மாறாத மாறிலி சமவெளியில் இருந்து உயரத்தில் இருப்பதே...

இது நீலகிரி மலை.. மலைகளின் ராணி ஊட்டியின் பிறப்பிடம்...

அந்நிய நாடென்றும் எந்த வித்தியாசமும் இல்லை என்றாலும், இருக்கும் நிலப்பரப்புக்கேற்றவாறு கனிமங்களும், தனிச்சிறப்புகளும் மாறுபடும்...

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி... 

தமிழ்நாட்டில் உள்ள பெருமைமிக்க பெருமாள் மலை...

இதுவொரு மலையின் மாலைத்தோற்றம்..

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link